தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வேளாண் திருத்த சட்ட எதிர்ப்புப் போராட்டம்: தொடங்கி இன்றுடன் 6 மாதங்கள் நிறைவு! - covai

கோயம்புத்தூர்: வேளாண் திருத்த சட்டங்களுக்கு எதிராகப் போராடத் தொடங்கி, ஆறு மாதங்கள் நிறைவடைந்த நிலையில், அதனை நினைவுகூரும் வகையில் கறுப்புக் கொடி கட்டி விவசாயிகள் எதிர்ப்புத் தெரிவித்தனர்.

வேளாண் திருத்த சட்டம் எதிர்ப்பு போராட்டம் தொடங்கி இன்று 6 மாதங்கள் நிறைவு!
வேளாண் திருத்த சட்டம் எதிர்ப்பு போராட்டம் தொடங்கி இன்று 6 மாதங்கள் நிறைவு!

By

Published : May 26, 2021, 6:05 PM IST

மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் திருத்தச் சட்டங்களைக் கண்டித்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வந்த நிலையில் கரோனா பரவலின் காரணமாக, அப்போராட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் அப்போராட்டங்கள் தொடங்கப்பட்டு, ஆறு மாதங்கள் நிறைவு ஆன நிலையில் இன்று கோவையில் பல்வேறு இடங்களில் விவசாயிகள், சில தன்னார்வ அமைப்புகள், கட்சியினர் என வேளாண் திருத்த சட்டங்களுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், அவரவர் இல்லங்களின் முன்பு, கறுப்புக் கொடி கட்டி எதிர்ப்பைப் பதிவு செய்தனர்.

வேளாண் திருத்தச் சட்டங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து தன்னார்வலர்களால் ஏந்தப்பட்ட பதாகை
கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகம் முன்பு கோவையின் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜன் தலைமையில் கறுப்புக்கொடி கட்டியும் வேளாண் திருத்தச் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தியும் பதாகைகளை ஏந்தியும் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது.

இதையும் படிங்க:ஸ்டெர்லைட் போராட்டம்: அரசியல் தலைவர்கள் மீதான வழக்குகள் வாபஸ்

ABOUT THE AUTHOR

...view details