கோவை லட்சுமி மில்ஸ் பகுதியில் உள்ள அரசினர் கூர்நோக்கு இல்லத்தில் இருந்து நள்ளிரவில்சிறுவர்கள் ஆறு பேர் தப்பியோடினர்.இது குறித்து, கூர்நோக்கு இல்ல தலைமை அலுவலருக்கு இரவு நேரத்தில் காவல் பணி செய்த காவலர்கள் தகவல் அளித்துள்ளார்.
தொடர்ந்து சிறுவர்களின் அடையாளங்கள் அனைத்து சோதனை சாவடிகளில் ரோந்து பணியில் இருந்த காவலர்களுக்கு தெரிவிக்கப்பட்டன. இந்நிலையில், தப்பியோடிய சிறுவர்கள் ஆறு பேரும் அதிகாலை 4 மணிக்கு உடுமலைபேட்டை அருகே பிடிபட்டனர்.