கோவை மாவட்டம் அன்னூரிலிருந்து கடந்த மாதம் சமய மாநாட்டிற்கு சென்றுவிட்டு திரும்பிய 4 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. இதையடுத்து, பாதிக்கப்பட்ட நால்வரும் கோவையில் உள்ள இ.எஸ்.ஜ கரோனா சிகிச்சை பிரிவில் அனுமதிக்கபட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இவர்களின் குடும்ப உறுப்பினர்கள் தனிமைப்படுத்தி வைக்கபட்டிருந்த நிலையில் அவர்களுக்கும் கரோனா பரிசோதனை நடத்தபட்டது. இதில் பெண்கள், சிறுவர் உட்பட 5 பேருக்கு கரோனோ தொற்று அறிகுறி உள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.