பொள்ளாச்சி தமிழிசை சங்கத்தின் 48ஆம் ஆண்டு தொடக்க விழா, தனியார் கல்யாண மண்டபத்தில் ஒரு வாரகாலம் நடைபெற்றது. இதில் ஆன்மிக சொற்பொழிவு, கர்நாடக இசை கச்சேரி, பட்டிமன்றம், இலக்கியம் சார்ந்த நாடகம் என பல்வேறு நிகழ்சிகள் நடத்தப்பட்டது.
தமிழிசை சங்கத்தின் 48ஆம் ஆண்டு தொடக்கவிழா: களைகட்டிய 'துக்ளக் தர்பார்' - துக்ளக் தர்பார்
கோவை: 'நாடக கலையை பள்ளி மற்றும் கல்லூரிகளில் பாடத்திட்டமாக அறிவித்தால், அது பற்றிய நல்ல கருத்துக்களை மக்களிடம் கொண்டு சேர்க்க முடியும்' என்று வரதராஜன் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, 'துக்ளக் தர்பார்' என்ற பெயரில் நகைச்சுவை நாடகம் வரதராஜன் தலைமையில் நடைபெற்றது. இதனை ஏராளமான பொதுமக்கள் கண்டுகளித்தனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த வரதராஜன் கூறுகையில், "நாடக கலை இன்று உலகமெங்கும் மக்களின் மனதில், காலத்தால் அழியாத வண்ணம் இடம்பெற்றுள்ளது.
தற்போது டிவி சீரியலை மக்கள் பார்த்தாலும் நாடகத்தை மக்கள் என்றும் மறக்கவில்லை. நாடக கலையை இன்றைய தலைமுறையினர் அறியும் வகையில், பள்ளி மற்றும் கல்லூரிகளில் பாடத்திட்டமாக அறிவித்தால், நாடக கலை பற்றிய நல்ல கருத்துக்களை மக்களிடம் கொண்டு சேர்க்கலாம்" என தெரிவித்தார்.