கோயம்புத்தூர் மாவட்டத்தில் கரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த மாநில அரசும், மத்திய அரசும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இருப்பினும், கோவை மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இந்நிலையில், கோவையில் நேற்று (ஆகஸ்ட் 22) 389 பேருக்கு புதிதாக கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 11 ஆயிரத்து 358ஆக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் நான்கு பேர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, கோவை மாவட்டத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 235ஆக அதிகரித்துள்ளது. சிகிச்சைப் பெற்று வந்தவர்களில், 312 பேர் நேற்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.