தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கோவையில் 387 பேருக்கு கரோனா உறுதி

கோவையில் இன்று (அக்டோபர் 16) 387 பேருக்குப் புதிதாக கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

கோவை
கோவை

By

Published : Oct 16, 2020, 8:29 PM IST

கோயம்புத்தூர் மாவட்டத்தில் முன்பு இருந்ததைவிட, கரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. இதனைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.

இருப்பினும், கோவை மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்வதால் மக்களிடையே அச்சம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், கோவையில் இன்று (அக்டோபர் 16) 387 பேருக்குப் புதிதாக கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 39 ஆயிரத்து 102 ஆக அதிகரித்துள்ளது.

கரோனாவால் சிகிச்சைப் பெற்றுவந்தவர்களில், 913 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன்மூலம் கோவையில் கரோனாவிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 34 ஆயிரத்து 688 ஆக அதிகரித்துள்ளது.

கோவை அரசு மருத்துவமனை, தனியார் மருத்துவமனைகள், கரோனா சிகிச்சை மையங்களில் மருத்துவம் பெற்றுவந்த ஒருவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்ததைத் தொடர்ந்து, மாவட்டத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 511 ஆக அதிகரித்துள்ளது.

ABOUT THE AUTHOR

...view details