கோயம்புத்தூர் மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலை பகுதியில் அமைந்துள்ள பெரியத்தடாகம் அனுவாவி சுப்ரமணிய சுவாமி கோயில் அருகே சிறுத்தை ஒன்று உயிரிழந்ததாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது.
மேற்குத் தொடர்ச்சி மலையில் 3 வயது சிறுத்தை உயிரிழப்பு - Western Ghats kovai
கோயம்புத்தூர்: மேற்குத் தொடர்ச்சி மலை பகுதியில் மூன்று வயதுடைய ஆண் சிறுத்தை ஒன்று உயிரிழந்தது.
3-year-old-leopard-dies
இதையடுத்து அங்கு விரைந்த வனத்துறையினர், சிறுத்தையின் உடலைக் கைப்பற்றினர். அதன்பின் வனத்துறையினர் முன்னிலையில் சிறுத்தையின் உடலை மருத்துவர்கள் உடற்கூறாய்வு செய்தனர். அதில், சிறுத்தைக்கு மூன்று வயது என்பதும், உணவுக் குழலில் ஏற்பட்ட காயத்தால் சிறுத்தை உயிரிழந்ததும் தெரியவந்தது.
இதையும் படிங்க:சிறுத்தையை வனப்பகுதிக்குள் விரட்ட கிராம மக்கள் கோரிக்கை!