கோவை மாவட்டம், ராமநாதபுரம் அருகேயுள்ள ஆறுமுகம் நகரைச் சேர்ந்தவர் காஷ்மீர் லாரன்ஸ். இவர் நேற்று (செப்.3) உப்பிலிபாளையம் சந்திப்பு அருகே, இருசக்கர வாகனத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு பேர், லாரன்ஸிடம் இருந்த செல்போனை பறித்துவிட்டு தப்ப முயன்றனர்.
கோவையில் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டுவந்த 3பேர் கைது! - திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டுவந்த 3பேர் கைது
கோவை: நகை, செல்போன் பறிப்பில் ஈடுபட்டுவந்த இரண்டு சிறுவர்கள் உள்பட 3 பேரை காவல் துறையினர் கைது செய்து, அவர்களிடமிருந்து செல்போன், இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர்.
அப்போது அவர் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் வாகனத்தின் பின்னால் அமர்ந்திருந்த சிறுவனைப் பிடித்து ரேஸ்கோர்ஸ் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். இதனையடுத்து காவல் துறையினர் நடத்திய விசாரணையில் பிடிபட்டவர் உடையாம்பாளையத்தைச் சேர்ந்த 17 வயது சிறுவன் என்பது தெரியவந்தது. அவன் உள்பட வரதராஜபுரத்தைச் சேர்ந்த 16 வயது சிறுவன், சவுரிபாளையத்தைச் சேர்ந்த நாகராஜ்(20) ஆகியோர் ஒன்று சேர்ந்து செல்போன் பறிப்பு, நகைப்பறிப்பு போன்றவற்றில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது.
மேலும் குற்றச்சம்பவங்களில் ஈடுபடுவதற்காக லட்சுமிமில் சந்திப்பு, ஆவாரம்பாளையம் உள்ளிட்ட இடங்களில் இருந்து 3 இருசக்கர வாகனங்களை திருடி அதனை பயன்படுத்தி வந்ததும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து இருவரையும் காவல் துறையினர் பிடித்தனர். விசாரணைக்குப் பின்னர் மூன்று பேரையும் கைது செய்த காவல் துறையினர், அவர்களிடம் இருந்த 3 இருசக்கர வாகனங்கள், செல்போன் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட நாகராஜ் உடுமலைப்பேட்டை கிளைச்சிறையில் அடைக்கப்பட்டார். மற்ற இரண்டு சிறுவர்களும் சிறார் சீர்திருத்தப்பள்ளியில் அடைக்கப்பட்டனர்.