கோவை மாவட்டம் கந்தேகவுண்டன் சாவடி அருகே உள்ள மாஸ்திகவுண்டன்பதி கிராமத்தில் முத்துவேல் என்பவருக்குச் சொந்தமான தோட்டத்தில் உள்ள பண்ணை வீட்டில் பணம் வைத்து ரம்மி உள்ளிட்ட சூதாட்டம் நடந்து வருவதாக கந்தேகவுண்டன் சாவடி காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
கோவை அருகே சூதாட்டத்தில் ஈடுபட்ட 28 பேர் கைது! - கோவை மாவட்ட செய்திகள்
கோவை: கந்தேகவுண்டன் சாவடி அருகே பண்ணை வீட்டில் பணம் வைத்து ரம்மி சூதாட்டத்தில் ஈடுபட்ட 28 பேரை காவல் துறையினர் கைதுசெய்தனர்.
தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்குச் சென்ற காவல் துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த நபர்கள் சிலர் பணம் வைத்து ரம்மி சூதாட்டத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.
காவல் துறையினரை பார்த்தவுடன் அங்கிருந்து தப்பி ஓட முயன்றவர்கள் விரட்டி பிடிக்கப்பட்டனர். இதில், அதே பகுதியைச் சேர்ந்த முருகன், குமார், ஐயப்பன் உள்ளிட்ட 28 பேரை காவல் துறையினர் கைதுசெய்தனர். மேலும் சூதாட்டத்தில் ஈடுபடுத்திய சீட்டு கட்டுகள், இரண்டு லட்சத்து 34 ஆயிரத்து 470 ரூபாய் பணம் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்.