தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கோவையில் 2ஆம் கட்ட பறவைகள் கணக்கெடுப்பு - 204 பறவை இனங்கள் பதிவு

கோவை மாவட்டத்தில் நடைபெற்ற இரண்டாம் கட்ட பறவைகள் கணக்கெடுப்பில், 204 பறவை இனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக வனத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

bird
bird

By

Published : Mar 8, 2023, 5:01 PM IST

கோவை:தமிழ்நாடு வனத்துறை சார்பில், பறவைகள் கணக்கெடுப்பு பணி ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படுகிறது. 2023ஆம் ஆண்டிற்கான பறவைகள் கணக்கெடுப்பு பணி நீர் பறவைகள் மற்றும் நிலப்பறவைகள் என இரண்டு கட்டங்களாக நடைபெற்றது. இதில், நீர் பறவைகளின் கணக்கெடுப்பு கடந்த ஜனவரி மாதம் நடைபெற்றது.

நிலப் பறவைகள் கணக்கெடுப்பு

கோவை மாவட்டத்தில் வனத்துறை சார்பில் 20 நீர்நிலைகளை தேர்வு செய்து, அங்குள்ள நீர் பறவைகள் கணக்கெடுக்கப்பட்டன.

நிலப் பறவைகள் கணக்கெடுப்பு

வாளையார் அணை, உக்கடம் குளம், குறிச்சி குளம், செங்குளம், வெள்ளலூர் குளம், சிங்காநல்லூர் குளம், கண்ணம்பாளையம் குளம், பள்ளபாளையம் குளம், இருகூர் குளம், பேரூர் குளம், கிருஷ்ணாம்பதி, கோளராம்பதி, நரசாம்பதி, செல்வாம்பதி, வேடப்பட்டி, சூலூர் குளம் உள்ளிட்ட 20 நீர் நிலைகளில் பறவைகள் கணக்கெடுப்பு பணி நடைபெற்றது.

நிலப் பறவைகள் கணக்கெடுப்பு

இதில், பறவைகள் ஆர்வலர்கள், பள்ளிக் கல்லூரி மாணவர்கள், வனத்துறை பணியாளர்கள் பங்கேற்றனர். இந்த கணக்கெடுப்பில், சில அரிய வகை பறவை இனங்கள், அழியும் நிலையில் உள்ள பறவை இனங்கள் கண்டறியப்பட்டன.

நிலப் பறவைகள் கணக்கெடுப்பு

இதைத்தொடர்ந்து இரண்டாம் கட்ட பறவைகள் கணக்கெடுப்பு பணி கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்றது. கோவை மாவட்டத்தில் உள்ள நிலப்பறவைகளைப் பதிவு செய்யும் நோக்கில் நடத்தப்பட்ட இந்த பறவைகள் கணக்கெடுப்பில், மொத்தம் 204 பறவை இனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், பறவைகளின் எண்ணிக்கை 7,579 ஆக இருப்பதாகவும் வனத்துறை தெரிவித்துள்ளது.

நிலப் பறவைகள் கணக்கெடுப்பு

இதுகுறித்து கோவை மாவட்ட வனத்துறையினர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கோவை மாவட்டத்தில் இரண்டாம் கட்ட பறவைகள் கணக்கெடுப்பு கடந்த மார்ச் 4 மற்றும் 5ஆம் தேதிகளில் நடைபெற்றது.

நிலப் பறவைகள் கணக்கெடுப்பு

இரண்டாம் கட்டமாக நடைபெற்ற கணக்கெடுப்பில், கோயம்புத்தூர் வனத்துறையானது 20 இடங்களை தேர்வு செய்தது. அங்கு பறவை வளர்ப்பு நிபுணர்கள், ஆர்வலர்கள் மற்றும் வன ஊழியர்கள் என 20 கணக்கெடுப்பு குழுக்களில் மொத்தம் 64 பங்கேற்பாளர்கள், 50 வன ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டனர்.

நிலப் பறவைகள் கணக்கெடுப்பு

கோயம்புத்தூர், பெரியநாயக்கன்பாளையம், மதுக்கரை, போளுவாம்பட்டி, காரமடை, மேட்டுப்பாளையம், சிறுமுகை ஆகிய 7 வனச்சரகங்களில் உள்ள காப்புக்காடுகளில் மொத்தம் 14 இடங்களில் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.

வனக் கல்லூரி வளாகம், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம், ஐஓபி காலனி, தாளியூர், கலங்கல் ஆகிய கிராமப்புற மற்றும் நகர்ப்புற இடங்களிலும் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.

நிலப் பறவைகள் கணக்கெடுப்பு

கணக்கெடுப்பின் அடிப்படையில் மொத்தம் 204 பறவை இனங்கள் பதிவு செய்யப்பட்டது, அதில் பறவைகளின் எண்ணிக்கை 7,579 ஆக உள்ளது. இதில் ரெட் ஸ்பர்ஃபோல், கிரீன் இம்பீரியல் பிஜியன், செஸ்ட்நட்- பெல்லிட் சாண்ட்க்ரூஸ், சிர்கீர் மல்கோஹா, ஜெர்டன்ஸ் நைட்ஜார், வைட்- ரம்ப்ட் நெடில் டெயில், க்ரெஸ்டட் ட்ரீஸ்விஃப்ட், ஓஸ்ப்ரே, லெஸ்ஸர் ஃபிஷ்- ஈகிள் வூட்- ஆந்தை, மலபார் ட்ரோகன், ரூஃபஸ் மரங்கொத்தி, வெள்ளை- வயிற்று மரங்கொத்தி, சிவப்பு கழுத்து பருந்து, பெரிக்ரைன் பால்கன், மஞ்சள் தொண்டை புல்புல், இந்தியன் பிளாக்பேர்ட், வெள்ளை- ரம்ப்ட் ஷாமா, மலபார் விசில் த்ரஷ், வெர்டிட்டர் ஃப்ளைகேட்சர், ஃபாரஸ்ட் வாக்டெய்ல் உள்ளிட்டவை கணக்கெடுப்பில் பதிவு செய்யப்பட்ட முக்கியமான பறவை இனங்கள் ஆகும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: மெல்ல விடை கொடு மனமே.. ‘கலீம்’ யானைக்கு ரிட்டையர்மென்ட்!

ABOUT THE AUTHOR

...view details