தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மாஞ்சா காத்தாடியால் 13 வயது சிறுவன் பலி; சிறுவனின் உடல் உறுப்புகளை தானம் செய்த பெற்றோர்! - soolaimedu boy died

சென்னை சூளைமேடு பகுதியில் பட்டம் பிடிக்க சென்ற 13 வயது மாணவன் மாடியிலிருந்து தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்ப்படுத்தி உள்ள நிலையில் அந்த சிறுவனின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டுள்ளது.

மாஞ்சா காற்றாடியால் மாய்ந்த 13 வயது சிறுவன்.
மாஞ்சா காற்றாடியால் மாய்ந்த 13 வயது சிறுவன்.

By

Published : Jun 6, 2023, 12:17 PM IST

சென்னை: சூளைமேடு பாரதி தெருவைச் சேர்ந்தவர் தண்டபாணி, இவரது இரண்டாவது மகன் பிரசன்னா(13), அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்துள்ளார். நேற்று மாலை சுமார் 6 மணி அளவில் பிரசன்னா தனது நண்பர்களுடன் தெருவில் விளையாடிக் கொண்டிருந்த போது,காத்தாடி ஒன்று அறுந்து வந்துள்ளது.

அதனைக் கண்ட பிரசன்னா அதைப் பிடிப்பதற்காக பின் தொடர்ந்து சென்றுள்ளார். அப்போது அங்குள்ள பெரியார் பாதை பகுதியில் இருக்கும் ஒரு வீட்டின் இரண்டாவது மாடியில் காத்தாடி சிக்கிக் கொண்டுள்ளது. அதனைக் கண்ட பிரசன்னா அந்த காத்தாடியை எடுப்பதற்காக மாடியின் மீது ஏறி உள்ளார்.

அப்போது அங்கிருந்து காத்தாடியை எடுக்க மற்றொரு மாடிக்குத் தாவ முயன்ற போது 30 அடி உயரத்திலிருந்து எதிர்பாராத விதமாகத் தவறி விழுந்த சிறுவன் பிரசன்னாவுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக பக்கத்திலிருந்தோர் சிறுவனை மீட்டு அருகிலிருந்த தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளனர்.

ஆனால், சிறுவன் பிரசன்னா மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே உயிர் இழந்து விட்டதாக மருத்துவமனையில் தெரிவித்துள்ளனர். பின்னர் இது குறித்து சூளைமேடு போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்ட நிலையில், மருத்துவமனைக்கு சென்ற போலீசார் சிறுவன் பிரசன்னாவின் உடலை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க:ரயிலில் விபத்து ஏற்படாமல் தடுத்த பணியாளருக்கு பாதுகாப்பு விருது

உயிரிழந்த சிறுவன் பிரசன்னாவின் உடல் உறுப்புகளை தானம் செய்வதாகவும், குழந்தைகளைப் பெற்றோர் பத்திரமாகவும், உரிய அரவணைப்போடும் பார்த்துக் கொள்ள வேண்டும் என பிரசன்னாவின் தந்தை கண்ணீர் மல்கத் தெரிவித்துள்ளார்.

சூளைமேடு பகுதியில் பட்டம் பிடிக்கச் சென்ற 13 வயது மாணவன் மாடியிலிருந்து தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், அந்த சிறுவனின் கண்கள் உள்ளிட்ட உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இச்சம்பவம் அந்த பகுதி மக்களைத் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.

சென்னையில் மாஞ்சா நூலில் பட்டம் விடுவதற்கான தடை உள்ள நிலையில், இது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நிகழ்ந்துகொண்டு வருகிறது அதனால் இந்த சம்பவம் குறித்து திவிர விசாரானை நடத்துமாறு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இவ்வழக்கில் பட்டம் விட்ட நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க:குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவுக்கு சுரினாம் நாட்டின் உயரிய விருது!

ABOUT THE AUTHOR

...view details