தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

10 சவரன் நகை மாயம்... குடியிருப்புப் பகுதியை நோட்டமிடும் மூவர்: சிசிடிவி காட்சி வெளியீடு - cctv footage release

கோயம்புத்தூர்: நள்ளிரவில் மூவர் குடியிருப்புப் பகுதியை நோட்டமிட்டபடி சுற்றித் திரியும் சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிசிடிவி காட்சி
சிசிடிவி காட்சி

By

Published : Aug 30, 2020, 6:40 PM IST

Updated : Aug 30, 2020, 7:35 PM IST

கோயம்புத்தூர் மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் காவல் எல்லைக்குட்பட்ட நரசிம்மநாயக்கன்பாளையம் பகுதியில் கடந்த திங்கள்கிழமை (ஆகஸ்ட் 24) சரோஜினி என்ற பெண்ணின் வீட்டில் 10 சவரன் நகை திருடு போனதாகக் கூறப்படுகிறது. இது குறித்து அவர் பெரியநாயக்கன்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரை தொடர்ந்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்ட நிலையில், அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். சிசிடிவி காட்சியில் சம்பவ தினத்தன்று இரவு சுமார் 2 மணி அளவில் மூன்று பேர் அப்பகுதியில் நடமாடுவது பதிவாகியுள்ளது. இதில் பதிவாகியிருக்கும் மூவரையும் அப்பகுதியில் இதுவரை பார்த்ததில்லை என குடியிருப்புவாசிகள் தெரிவித்துள்ளனர்.

சிசிடிவி காட்சி

இதையடுத்து, கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சியை கொண்டு அந்த மூவர் யாரென பெரியநாயக்கன்பாளையம் காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க:கடனுக்கு மளிகை பொருள்கள் கேட்டு மிரட்டிய வீச்சரிவாள் ஆசாமி!

Last Updated : Aug 30, 2020, 7:35 PM IST

ABOUT THE AUTHOR

...view details