சென்னை: ஆண்டுக்கு இருமுறை மட்டுமே சூரியன் ஒரு பொருளின் நேர் உச்சிக்கு வரும். அப்போது, அப்பொருளின் நீளம் ஆண்டுக்கு இருமுறை பூஜ்ஜியமாகிறது.
அதாவது, அந்தப் பொருளின் நிழல் கீழே விழாது. இந்த நாளே 'நிழலில்லா நாள்' ஆகும்.
இந்த 'நிழலில்லா நாள்' ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல், ஆகஸ்ட் மாதங்களில் நிகழும். அதன்படி கடந்த ஏப்ரல் 24ஆம் தேதி இந்த நிழலில்லா நாள் வந்தது.
இன்று (ஆக. 18) இரண்டாவது முறையாக மதியம் இந்த நிழலில்லா நாளைக் காண முடிந்தது.
தமிழ்நாட்டில் சென்னை, காஞ்சிபுரம், கடலூர், வேலூர், ஆவடி, ஸ்ரீபெரும்புதூர், அரக்கோணம், ஆற்காடு, ஆரணி, ஆம்பூர், வாணியம்பாடி, திருப்பத்தூர், ஓசூர் ஆகிய இடங்களில் நிழலில்லா நாள் நிகழ்வு ஏற்பட்டது.
சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள பிர்லா கோளரங்கத்தில் நிழலில்லா நாளைக் காணவும், மக்களுக்கு அது குறித்து விளக்கமளிக்கவும் ஏற்பாடுசெய்யப்பட்டது.
இதையும் படிங்க : 3ஆவது அலை வந்தாலும் சமாளிக்க அரசு தயார் - மா. சுப்பிரமணியன்