சென்னை: தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் இரண்டு முறை சூரியன் உச்சிக்கு வரும் நாள்களை நிழல் இல்லாத நாள் என்று கூறப்படுகிறது. சென்னை கோட்டூர்புரம் பிர்லா கோளரங்கத்தில் நிழலில்லா நாள் காட்சிக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.
அப்போது தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையத்தின் செயல் இயக்குநர் நண்பகலில் சூரியன் சரியாக தலைக்கு மேல் இருக்கும் போது, பொருள்களால் வீசப்படும் நிழலின் நீளம் பூஜ்ஜியமாக இருக்கும். ஆண்டிற்கு இரண்டு முறை அட்சய ரேகைக்கு இடையில் நிழலின் பற்றாக்குறை, + 23.5 மற்றும் -23.5 டிகிரி என இருக்கும்.