சென்னை மெரினா கடற்கரையில் ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சார்ந்த அமித் குமார்(23) என்பவர் நேற்று (ஜனவரி 15) கடலில் குளித்துக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக கடல் சீற்றம் காரணமாக அலையில் சிக்கி கடல் உள்ளே இழுத்துச் செல்லப்பட்டுள்ளார்.
கடல் அலையில் சிக்கியவரை மீட்ட உயிர் காக்கும் பிரிவு - சென்னை மெரீனா கடற்கரை
கடல் அலையில் சிக்கி இழுத்துச் செல்லப்பட்ட வட மாநில இளைஞரை கடலோர பாதுகாப்பு குழும உயிர் காக்கும் பிரிவு அதிகாரிகள் பத்திரமாக மீட்டனர்.
இதையடுத்து ரோந்து பணியில் இருந்த கடலோர பாதுகாப்பு குழும உயிர் காக்கும் பிரிவு போலீசார்கள் மற்றும் தன்னார்வலர்கள் இணைந்து மிதவை மற்றும் உயிர் காக்கும் உபகரணங்களைக் கொண்டு கடல் அலையில் இழுத்துச் செல்லப்பட்ட அமித் குமாரை மீட்டு கரைக்கு இழுத்து வந்தனர். அதன்பின் அவருக்கு முதல் உதவி செய்து அனுப்பி வைத்தனர். அதேபோல அங்கு குளித்துக் கொண்டிருந்தவர்களை அங்கிருந்த போலீசார் அப்புறப்படுத்தினர்.
இதையும் படிங்க:முல்லைப் பெரியாறில் புதிய அணை?.. ‘தமிழ்நாடு தன் உரிமையை விட்டு தராது’ - அமைச்சர் ஐ. பெரியசாமி