தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

முன்விரோதத்தால் புது வண்ணாரப்பேட்டை அருகே அரிவாள் வெட்டு; மூவர் கைது!

சென்னை: முன்விரோதம் காரணமாக புதுவண்ணாரப்பேட்டை சுனாமி குடியிருப்பு அருகே இளைஞர் ஒருவர் வெட்டப்பட்ட சம்பவம் தொடர்பாக மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

sunami residence crime  chennai news  puthu vannarapettai news
முன்விரோதத்தால் புது வண்ணாரப்பேட்டை அருகே அரிவாள் வெட்டு; மூவர் கைது

By

Published : Sep 14, 2020, 10:00 PM IST

புதுவண்ணாரப்பேட்டை சுனாமி குடியிருப்பு பகுதியில் வசித்துவருபவர் விக்னேஷ்(28). சில நாட்களுக்கு முன்பு இவர், தனது நண்பர்களுடன் சென்று வஉசி நகரிலுள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் சில இளைஞர்களுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதைத்தொடர்ந்து, வஉசி நகரைச் சேர்ந்த சிவசந்திரன்(22), சுரேந்தர்(19), பார்த்திபன் ஆகியோர் சேர்ந்து சுனாமி குடியிருப்பு அருகேயுள்ள கருமாரி அம்மன் கோயில் அருகே விக்னேஷை கத்தியால் தாக்கியுள்ளனர்.

பின்னர், அப்பகுதியில் உள்ள இருசக்கர வாகனத்தில் தீ வைத்துவிட்டு தப்பியோடிவிட்டனர். அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் சம்பவம் தொடர்பாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் விக்னேஷை மீட்டு அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இச்சம்பவம் தொடர்பாக மூன்று பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதையும் படிங்க: பல்பொருள் அங்காடியில் திருட்டு - காட்டிக் கொடுத்த சிசிடிவி

ABOUT THE AUTHOR

...view details