சென்னை:பழைய வண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வருபவர் காளிதாஸ்(45). இவர் நேற்று(டிச.4) பணிமுடிந்து நுங்கம்பாக்கத்தில் உள்ள காவலர் குடியிருப்புக்குத் தனது இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அண்ணாசாலை மன்றோ சிலை அருகே காளிதாஸ் நின்று தண்ணீர் அருந்தும் போது, அங்கு மதுபோதையில் இருசக்கர வாகனத்தில் வந்த நபர்கள் காளிதாஸிடம் வீண் தகராற்றில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.
மது போதையில் காவலரிடம் தகராறில் ஈடுபட்ட இளைஞரை மடக்கி பிடித்த போலீஸ் அப்போது, காளிதாஸ் தான் உதவி ஆய்வாளர் எனக்கூறியும் இளைஞர்கள் ஆபாசமாக ஆபாசமாகப் பேசியதால் கோபமடைந்த காளிதாஸ் பழைய குற்றவாளியா என கண்டுபிடிக்கும் ஆப் மூலமாக போதை ஆசாமிகளை செல்போனில் உதவி ஆய்வாளர் படம்பிடித்துள்ளார். ஆனால் தொடர்ச்சியாக ஆபாசமாகப் பேசி உதவி ஆய்வாளரைத் துரத்தி வந்ததால் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு உதவி ஆய்வாளர் காளிதாஸ் தகவல் தெரிவித்துள்ளார்.
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்குத் திருவல்லிக்கேணி போலீசார் வந்த போது, மற்றவர்கள் அனைவரும் ஓட ஒருவர் மட்டும் போலீசாரிடம் சிக்கியுள்ளார். அவனை பிடித்து விசாரித்த போது மதுபோதையில் காவல்துறையை ஆபாசமாகப் பேசி தகராறில் ஈடுபட்டு ஒத்துழைக்காததால், வேறு வழியில்லாமல் போலீசார் அவனது கால்களை கயிற்றால் கட்டி காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.
பின்னர் உதவி ஆய்வாளர் காளிதாஸ் அளித்த புகாரின் பேரில், அவனிடம் விசாரணை நடத்திய போது, மந்தைவெளி பகுதியைச் சேர்ந்த பாலாஜி(24) என்பதும், நிகழ்ச்சிகளுக்கு அலங்கார வேலை செய்து வருவதும் தெரியவந்தது. அளவுக்கு அதி மதுபோதையில் வாலிபர் இருப்பதால் விசாரணைக்கு இன்று(டிச.5) ஆஜராகுமாறு போலீசார் எழுதி வாங்கிக் கொண்டு வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.
இதையும் படிங்க:பெண்ணை கடத்திய பாஜக பிரமுகர் - இஸ்லாமிய கூட்டமைப்பு போராட்டம் அறிவிப்பு