தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருமணத்தை மீறிய உறவை துண்டிக்காததால் கொலை; இளைஞர் கைது! - chennai latest news

தனது மாமியாருடன் இருந்த திருமணத்தை மீறிய உறவை துண்டிக்காத நபரை கொலை செய்த இளைஞர் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார்.

திருமணத்தை மீறிய உறவை துண்டிக்காததால் கொலை; இளைஞர் கைது!
திருமணத்தை மீறிய உறவை துண்டிக்காததால் கொலை; இளைஞர் கைது!

By

Published : Oct 25, 2021, 6:17 AM IST

சென்னை: சென்னையின் கொரட்டூரைச் சேர்ந்தவர் ராணி. இவரது கணவர் கடந்த ஆண்டு உயிரிழந்து விட்டார். இந்நிலையில் இவருக்கு கார் விற்பனையாளர் கோபி (40) என்பவருடன் திருமணத்தை மீறிய உறவு ஏற்பட்டுள்ளது. இந்த தகவல் ராணியின் மருமகன் நந்தகுமாருக்கு (22) தெரியவந்துள்ளது.

இதனையடுத்து பலமுறை தனது மாமியாருடனான திருமணத்தை மீறிய உறவை துண்டிக்கும்படி நந்தகுமார், கோபியை வலியுறுத்தியுள்ளார். இருப்பினும் கோபி திருமணத்தை மீறிய உறவை கைவிடவில்லை எனக் கூறப்படுகிறது. இந்நிலையில் அக்டோபர் 22ஆம் தேதி இரவு ராணியின் வீட்டிற்கு கோபி வந்துள்ளார்.

கைதும், உயிரிழப்பும்...

இதனையறிந்து கோபமடைந்த நந்தகுமார், சம்பவ இடத்துக்கு வந்து கோபியை சரமாரியாக முகத்தில் குத்தியுள்ளார். இதில் கோபி மூக்கு, வாய் உள்ளிட்ட இடங்களில் ரத்த காயம் ஏற்பட்டு மயங்கி விழுந்தார். அவரை மீட்ட அக்கம்பக்கத்தினர் 108 ஆம்புலன்ஸ் மூலமாக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்துள்ளனர்.

அங்கு கோபிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதற்கிடையே கோபியின் தாயார் தகராறு குறித்து கொரட்டூர் காவல் நிலையத்தில் புகாரளித்தார். இந்தப் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், நந்தகுமாரை நேற்று முன்தினம் (அக்.23) கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கோபி, நேற்று (அக்.24) சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். உயிரிழப்பையடுத்து தகராறு வழக்கானது, கொலை வழக்காக மாற்றம் செய்யப்பட்டது.

இதையும் படிங்க:முன்னாள் ரவுடிகள் இரண்டு பேர் வெட்டி கொலை!

ABOUT THE AUTHOR

...view details