சென்னை:மெரினா கடற்கரையில் உள்ள காமராஜர் சாலையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பாதுகாப்பு வாகனங்கள் சூழ சென்று கொண்டிருந்தார். அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர் முதலமைச்சரின் கான்வாய் வாகனத்தின் குறுக்கே வந்து முந்திச் செல்ல முயற்சி செய்துள்ளார்.
இவரை, நேப்பியர் பாலம் அருகே நின்று கொண்டிருந்த போக்குவரத்து காவல்துறையினர் மடக்கிப் பிடித்தனர். பின்னர் அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், கே.கே நகரைச் சேர்ந்த அஜித்குமார் என்பது தெரிய வந்துள்ளது. மேலும், அவர் எம்.ஜி.ஆர் நகர் பகுதியில் ஒரு வாகனத்தை திருடி எடுத்து வந்துள்ளார் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.