தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருமணத்திற்கு வற்புறுத்தல்..பெண்ணுக்கு கத்திக் குத்து.. இளைஞர் கைது.. - கணவரை பிரிந்து வாழும் பெண்

அரும்பாக்கம் அருகே கணவரை பிரிந்து வாழும் பெண்ணை திருமணத்திற்கு வற்புறுத்தி கத்தியால் தாக்கிய இளைஞரை காவல்துறையினர் கைது செய்தனர்.

arumbakkam  youth arrested  youth arrested for stabbed a woman  stabbed a woman by forcing marriage  forcing marriage  marriage  chennai news  chennai latest news  பெண்ணுக்கு கத்தி குத்து  அரும்பாக்கம்  போலீசார்  கணவரை பிரிந்து வாழும் பெண்  கத்தி குத்து
கத்தி குத்து

By

Published : Nov 28, 2022, 10:43 AM IST

சென்னை:அரும்பாக்கம் அருகே 30 வயது பெண், சுமார் 8 ஆண்டுகளாக கணவரை பிரிந்து பிள்ளைகளுடன் வசித்து வருகிறார். இவருக்கு தெரிந்த நபரான கன்னியப்பன் என்பவர் கடந்த 26-ம் தேதி இரவு இவரது வீட்டிற்கு சென்று தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தி, தகராறு செய்துள்ளார்.

இதற்கு அந்த பெண் மறுப்பு தெரிவித்ததால், ஆத்திரமடைந்த கன்னியப்பன், அங்கிருந்த கத்தியால் பெண்ணை தாக்கியதாக கூறப்படுகிறது. அப்போது உடனிருந்த பெண்ணின் தோழி கன்னியப்பனை தடுத்ததாகவும், அவரையும் கன்னியப்பன் கத்தியால் தாக்கிவிட்டு தப்பிச் சென்றதாகவும் கூறப்படுகிறது.

இதனால் பாதிக்கப்பட்ட பெண்ணும், அவரது தோழியும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, பின் அரும்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். அதன்பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்நிலையில் அரும்பாக்கம் கண்ணப்பன் நகரை சேர்ந்த கன்னியப்பனை(26) கைது செய்த காவல்துறையினர், பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க: பேருந்து நிலையத்தில் கழுத்தறுக்கப்பட்டு கொலை! இருவர் கைது

ABOUT THE AUTHOR

...view details