தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

முன்விரோதம் காரணமாக கூலி தொழிலாளிக்கு கத்தி குத்து: இளைஞர்கள் கைது! - கத்தி குத்து

சென்னையில் முன்விரோதம் காரணமாக கூலித் தொழிலாளியை கத்தியால் குத்திய இளைஞர்களை காவல் துறையினர் கைது செய்தனர்.

முன்விரோதம் காரணமாக கூலி தொழிலாளிக்கு கத்தி குத்து
முன்விரோதம் காரணமாக கூலி தொழிலாளிக்கு கத்தி குத்து

By

Published : Jul 1, 2021, 10:12 AM IST

சென்னை: புளியந்தோப்பு கே.எம். கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் கூலித் தொழிலாளி சுரேஷ் (38). இவர் தனது வீட்டின் வெளியே நண்பர் செல்வம் என்பவருடன பேசிக் கொண்டிருந்தார்.

அப்போது அந்த வழியாக வந்த இளைஞர்கள் சுரேஷை கத்தியால் குத்தினர். இதில், தலையில் பலத்த காயமடைந்த சுரேஷ் அங்கேயே மயங்கி விழுந்தார்.

உடனடியாக அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இளைஞர்கள் கைது:

இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த புளியந்தோப்பு காவல் துறையினர், சூளையை சேர்ந்த கோகுல் (19), தட்டான்குளத்தை சேர்ந்த விக்கி (22) ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், தப்பியோடிய கூட்டாளிகளை காவல் துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். முன்விரோதம் காரணமாக இந்தக் கொலை முயற்சி நடந்திருப்பதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதையும் படிங்க: இரு தரப்பினருக்கு இடையே மோதல்: ஒருவர் கொலை

ABOUT THE AUTHOR

...view details