சென்னை சர்வதேச விமானநிலையத்திற்கு குவைத்திலிருந்து தனியாா் சிறப்பு விமானம் ஒன்று நேற்று (ஜூலை 23) இரவு வந்தது. அதில் வந்த பயணிகளின் பாஸ்போர்ட், ஆவணங்களை சென்னை விமானநிலைய குடியுரிமை அலுவலர்கள் கம்ப்யூட்டர் மூலம் ஆய்வு செய்து அனுப்பினர்.
அப்போது கன்னியாகுமரியை சோ்ந்த தாதீயூஸ் (33) என்பவரின் பாஸ்போர்ட்டை பரிசோதித்தபோது, கம்ப்யூட்டரில் தாதீயூஸ் கன்னியாகுமரி காவல்துறையினரால் கடந்த 8 ஆண்டுகளாக தேடப்படும் தலைமறைவு குற்றவாளி என்பது தெரியவந்தது.
மேலும் இவா் மீது 2013 ஆண்டில் கன்னியாகுமரி மாவட்டத்தில் நடந்த ஒரு கோஷ்டி மோதல்,கொலை மிரட்டல், அடிதடி சண்டை போன்ற வழக்குகள் இருப்பதும் தெரியவந்தது.
இதையடுத்து தாதீயூஸ்சை விமானநிலையத்திற்கு வெளியே விடாமல் அலுவலர்கள் அங்கிருந்த ஒரு அறையினுள் அடைத்து வைத்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், கோஷ்டி மோதல் வழக்கில், காவல்துறையினர் தன்னை கைது செய்துவிடுவாா்களோ என்ற பயத்தில் வெளிநாட்டிற்கு தப்பி சென்று விட்டதாக தாதீயூஸ் தெரிவித்தார்.