தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கசந்த காதல்.. கைவிட்ட காதலன்... மாணவி எடுத்த விபரீத முடிவு! - சென்னை கல்லூரி மாணவி தற்கொலை வழக்கு

சென்னையில் கல்லூரி மாணவி தற்கொலை செய்துகொண்ட வழக்கில் அவரது காதலன் கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

college girl suicide  college girl suicide in love failure  youth arrest for college girl suicide  chennai college girl suicide case  chennai latest news  சென்னை செய்திகள்  சென்னை கல்லூரி மாணவி தற்கொலை  கல்லூரி மாணவி தற்கொலை  சென்னை கல்லூரி மாணவி தற்கொலை வழக்கு  கல்லூரி மாணவி தற்கொலை வழக்கில் காதலன் கைது
காதலி தற்கொலை

By

Published : Dec 3, 2021, 10:14 PM IST

சென்னை:சென்னையில் கல்லூரி மாணவி ஒருவர் நவ.30ஆம் தேதி தற்கொலை செய்துகொண்டார். இது குறித்து அவரது உறவினர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.

இந்த விசாரணையில், மாணவியின் செல்போனை ஆராய்ந்த போது அவரும், பக்கத்து வீட்டில் உள்ள இளைஞர் ஒருவரும் காதலித்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த இளைஞரிடம் காவலர்கள் விசாரணை நடத்தினார்கள்.

அப்போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. இளைஞரும், மாணவியும் காதலித்து வந்துள்ளனர். இதைப் பயன்படுத்தி சம்பந்தப்பட்ட இளைஞர் அப்பெண்ணிடம் உடல் ரீதியான தொடர்பை ஏற்படுத்திக்கொண்டுள்ளார்.

பின்னர் அந்த மாணவியிடம் பேசுவதை நிறுத்திவிட்டு பிரிந்து சென்று விட்டார். இதை ஏற்றுக்கொள்ள முடியாத மாணவி, தன்னை திருமணம் செய்துகொள் என்று கேட்டுள்ளார். ஆனால் அந்த இளைஞர் திருமணத்துக்கு மறுத்ததுடன் வேறொரு பெண்ணிடம் தொடர்பை ஏற்படுத்திக்கொண்டுள்ளார்.

இதனால் மனமுடைந்த மாணவி தற்கொலை செய்துகொண்டார். முன்னதாக இளைஞர் பாதிக்கப்பட்ட மாணவியை தகாத வார்த்தைகளால் திட்டியதுடன், வேண்டுமென்றால் தற்கொலை செய்துகொள் என்று அவதூறாக பேசியதும் தெரியவந்தது.

தற்கொலை வேண்டாம்

இதையடுத்து தற்கொலை வழக்கு கீழ்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு மாற்றப்பட்டது. காதல் விவகாரத்தில் மாணவி தற்கொலை செய்துகொண்டது மட்டுமின்றி அவர் பாலியல் வன்புணர்வு கொடுமைக்கும் ஆளாக்கப்பட்டுள்ளதால், இளைஞர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் நடவடிக்கை முடியுமா என்பது குறித்து காவலர்கள் சட்ட வல்லுநர்களுடன் ஆலோசித்து வருகின்றனர்.

இதையும் படிங்க: செல்போன் கடை உரிமையாளருக்கு சரமாரி வெட்டு - மூவர் கைது

ABOUT THE AUTHOR

...view details