தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

25 பெண்களிடம் பாலியல் சீண்டல் - கைதான இளைஞர் வாக்குமூலம் - பாலியல் தொல்லை கொடுத்த இளைஞர் கைது

சாலையில் தனியாக செல்லும் பெண்களை குறிவைத்து பாலியியல் சீண்டலில் ஈடுபட்டு வந்த இளைஞரை காவல் துறையினர் கைது செய்தனர்.

Etv Bharat தனியாக செல்லும் பெண்களிடம் பாலியல் சீண்டல்
Etv Bharat தனியாக செல்லும் பெண்களிடம் பாலியல் சீண்டல்

By

Published : Sep 8, 2022, 4:29 PM IST

சென்னை: மயிலாப்பூர், அபிராமபுரம் ஆகிய பகுதிகளில் தனியாக செல்லும் இளம் பெண்களை குறிவைத்து அவர்களிடம் பாலியல் சீண்டலில் மர்மநபர் ஈடுபடுவதாக புகார்கள் வந்தன. குறிப்பாக நடைபயிற்சிக்கு செல்லும் பெண்கள், தனியாக நடந்து செல்பவர்களை குறிவைத்து இது போன்ற பாலியல் சீண்டல்களில் ஈடுப்பட்டதும் தெரியவந்தது.

அதே போல நேற்று முன்தினம் சி.பி. ராமசாமி சாலை வழியாக கல்லூரிக்கு சைக்கிளில் சென்று கொண்டிருந்த கல்லூரி மாணவியை பின்தொடர்ந்து சென்ற இளைஞர் ஒருவர் யாரும் இல்லாத இடத்தில் அந்த மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுப்பட்டுள்ளார். மதிய வேளையில் பட்டப்பகலில் நடைபெற்ற இந்த சம்பவத்தால் அதிர்ச்சியடைந்த அந்த கல்லூரி மாணவி இது குறித்து தனது தந்தையிடம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவரது தந்தை அபிராமபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் அந்த பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த காவல் துறையினர், பாலியல் சீண்டலில் ஈடுபட்டு வந்த நபரின் இருசக்கர வாகனத்தின் பதிவு எண்ணை வைத்து அந்நபரை கைது செய்தனர்.

தொடர்ந்து காவல் துறையினர் நடத்திய விசாரணையில் அவர், கோட்டூர்புரம் பகுதியைச் சேர்ந்த 25 வயதான தனுஷ் என்பதும், பி.காம் பட்டதாரியான அவர் தனியார் நிறுவனத்தில் கணக்காளராக பணியாற்றி வருவதும் தெரியவந்தது. மேலும் அவர் காதலித்து திருமணம் செய்துகொண்ட நிலையில் 10 மாத கை குழந்தை உள்ளதும் தெறியவந்தது.

சாலையில் செல்லும் பெண்கள், நடைபயிற்சி செல்லும் பெண்களை குறிவைத்து அவர் பாலியல் சீண்டலில் ஈடுப்பட்டு வந்ததும் விசாரணையில் தெரியவந்தது. அபிராமபுரம், மயிலாப்பூர், கடற்கரை போன்ற பகுதிகளை மையப்படுத்தி தனியாக நடந்து செல்லும் பெண்களிடம் பாலியல் சீண்டலில் ஈடுப்பட்டதாகவும் அவர் வாக்குமூலம் கொடுத்தார்.

மேலும் நடனபயிற்சிக்குச் செல்லும் வழக்கம் உடைய தனுஷ், நடனபயிற்சிக்கு தனியாக செல்லும் பெண்களிடம் பாலியியல் சீண்டலில் ஈடுப்பட்டுள்ளார். கடந்த சில வாரங்களில் மட்டும் சுமார் 25 மேற்பட்ட பெண்களுக்கு மேல் இவர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டு இருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்ட தனுஷ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க:பாலியல் வழக்கில் கைதாகி சிறையில் உள்ள இளைஞர்களுக்கு மனநல ஆலோசனை வழங்க பரிந்துரை

ABOUT THE AUTHOR

...view details