தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஊதாரி கணவன்; திருட்டில் ஈடுபட்ட பெண் கைது - வெளியான சிசிடிவி வீடியோ

சென்னை: முகப்பேர் பகுதியில் வீடுகளில் புகுந்து செல்போன் மற்றும் பணத்தை திருடி சென்ற வழக்கில் இளம்பெண் கைது செய்யப்பட்டார்.

theft
theft

By

Published : Sep 15, 2020, 7:06 AM IST

சென்னை முகப்பேர் பகுதியில் இயங்கி வரும் பிரபல தனியார் மருத்துவமனையில் வட மாநில இளைஞர்கள் தங்கியுள்ளனர். கடந்த சில நாள்களுக்கு முன்பு அவர்களது அறையில் இருந்து ஐந்து செல்போன்கள் மற்றும் பத்து ஆயிரம் பணம் திருடு போனது. இதனையடுத்து மேலாளர் சபீர் மூலமாக ஜெஜெ நகர் காவல் நிலையத்தில் புகாரளித்திருந்தனர்.

இந்தப் புகாரின் பேரில், ஜெஜெ நகர் குற்றப்பிரிவு ஆய்வாளர் வனிதா தலைமையிலான காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று அங்கிருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர். அப்போது 20வயது மதிக்கதக்க பெண் ஒருவர் அறையில் திருடிய பொருள்களை கைப்பயில் வைத்து எடுத்து செல்லும் காட்சிகள் பதிவாகியிருந்தது. ஆனால், பழைய குற்றவாளிகளின் பட்டியலில் அந்த இளம்பெண் படம் இல்லாததால் அவரை கண்டுபிடிப்பதில் சிக்கல் ஏற்பட்டது.

இந்நிலையில், வீட்டில் திருடுபோன செல்போன் ஐ.எம்.இ நம்பர் மூலம் செல்போன் சிக்னலை கொண்டு கைது செய்தனர். அவரிடம் மேற்கொண்ட விசாரணையில், அண்ணாநகர் ரவுண்ட் பில்டிங் பகுதியைச் சேர்ந்த வாசுகி என்பதும், இவரது கணவர் சரத் என்பவர் கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பாக குடித்துவிட்டு பிச்சுமணி என்பவரை கத்தியால் வெட்டிய வழக்கில் சிறைக்கு சென்றதும் தெரியவந்தது.

வெளியான சிசிடிவி வீடியோ

கணவர் குடித்துவிட்டு ஊதாரியாக சுத்துவதாலும், போதிய வருமானம் இல்லாததால் பெண்கள் விடுதி மற்றும் திறந்திருக்கும் வீடுகளில் புகுந்து வாசுகி திருடி வந்ததும் விசாரணையில் தெரியவந்தது. வாசுகி மீது வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்து சிறையிலடைத்தனர்.

இதையும் படிங்க:24 லட்சம் பேருக்கு கரோனா கண்டறிதல் பரிசோதனை செய்துள்ள சென்னை மாநகராட்சி!

ABOUT THE AUTHOR

...view details