சென்னை ராமாபுரம் பகுதியைச் சேர்ந்த தம்பதியினர் கூலித்தொழிலாளர்களாக வேலைபார்த்து வருகின்றனர். அவர்களுக்கு எட்டு வயதில் மூன்றாம் வகுப்பு படிக்கும் மகள் ஒருவர் இருக்கிறார். தனியார் பள்ளியில் பயின்று வரும் அச்சிறுமிக்கு தற்போது கோடைக்கால விடுமுறை என்பதாலும், அவர்கள் கூலி வேலைக்கு செல்வதாலும் சிறுமியை அருகில் உள்ள உறவினர் வீட்டில் விட்டுச் செல்வது வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
மூன்றாம் வகுப்பு சிறுமிக்கு பாலியல் தொல்லை - போக்சோவில் சிறுவன் கைது! - Young boy arrested in pocso
சென்னை: ராமாபுரம் அருகே மூன்றாம் வகுப்பு சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த, 17 வயது சிறுவனை காவல் துறையினர் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.
அங்கு சிறுமியின் உறவினரும் கட்டிடக் கூலித் தொழிலாளியுமான 17 வயது சிறுவன், சிறுமிக்கு அடிக்கடி பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். நேற்று மீண்டும் பாலியல் தொல்லை கொடுத்து அத்துமீறியதால் சிறுமி அழுதுகொண்டே தனது பெற்றோரிடம் தெரிவித்தார்.
பின்னர், இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் வடபழனி மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதையடுத்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய காவல் ஆய்வாளர் கலைச்செல்வி, சிறுவனை நேற்று போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தார். பின்னர் குற்றத்தில் ஈடுபட்ட சிறுவனை செங்கல்பட்டில் உள்ள கூர்நோக்கு இல்லத்தில் சேர்த்தனர்.