சென்னை காவல் துறையில் ரோந்து பணியில் ஈடுபடுபவர்கள், நீதிமன்றப் பணிகள், முக்கிய நபர்களின் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுபவர்கள் என்று பல்வேறு வகையில் சுழற்சி முறையில் காவலர்கள் பணிபுரிகின்றனர். மேலும், உடல்ரீதியான பிரச்னைகள் வாட்டும் நேரத்தில் அவர்களால் விடுப்பும் எடுக்க முடியாது. இரவு நேரப் பணி போன்றவையும் அவர்களைச் சோர்வடையச் செய்கிறது.
இதனால் காவலர்களுக்கு மன அழுத்தம் ஏற்படுவதால், அவர்களுக்கு உளவியல் நிபுணர்கள் மூலம் ஆலோசனை வழங்கப்பட்டுவருகிறது. இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட ஆயுதப்படைக் காவலர்களுக்கு பகுதி பகுதியாக ஆலோசனை வழங்கப்படுகிறது.
ஆயுதப்படைக் காவலர்களுக்கு மன அழுத்தம் தீர ஆலோசனை! - police yoga practice
சென்னை: கரோனா தடுப்புப் பணிகளில் ஈடுபட்டுவரும் ஆயுதப்படைக் காவலர்களின் மன அழுத்தத்தைப் போக்க, உளவியல் நிபுணர்கள் மூலம் ஆலோசனை வழங்கப்பட்டது.
காவலர்களுக்கு மன அழத்தம் தீர ஆலோசனை
புதுப்பேட்டை ராஜரத்தினம் மைதானத்தில் முதற்கட்டமாக 200 காவலர்களுக்கு உளவியல் நிபுணர்கள் மூலம் ஆலோசனை வழங்கப்பட்டது. குறிப்பாக, கிங்க் இன்ஸ்ட்யூட் உளவியல் நிபுணர் மகாலஷ்மி, சித்த மருத்துவர்கள் ஆகியோர் மூலம் காவலர்களுக்கு மனநல ஆலோசனையும், வாழும் கலை அமைப்பு மூலம் யோகா பயிற்சியும் வழங்கப்பட்டது.
இதையும் படிங்க: பரமத்திவேலூரில் தூய்மைப் பணியாளர்களுக்கு மனநல ஆலோசனைப் பயிற்சி!