தமிழ்நாடு முழுவதும் நேற்று (ஜூன் 23) 119 மையங்களில் முதுகலை ஆசிரியர் பணிக்கான தேர்வு நடத்தப்பட்டது. இதற்கு 30,833 பேர் இணையதளம் மூலம் விண்ணப்பித்திருந்தனர். ஆசிரியர் தேர்வு வாரியம் இத்தேர்வை முதன்முறையாக கணினி வழியில் நடத்தியது. சில இடங்களில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக தேர்வு எழுதுவதில் சிரமம் ஏற்பட்டது. இதனால் தேர்வர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
செல்ஃபோனுடன் தேர்வு எழுத வந்தவர்கள்! - விதிகளை மீறி
சென்னை: முதுகலை கம்ப்யூட்டர் ஆசிரியர் தகுதித் தேர்வில் விதிகளை மீறி தேர்வு மையங்களுக்குள் தேர்வர்கள் செல்ஃபோன் எடுத்துச் சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனால், அவர்களுக்கு வேறு நாளில் தேர்வு நடத்தப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்தது. மேலும், தேர்வு நாள், தேர்வு மையம் ஆகிய விவரங்கள் குறுஞ்செய்தி, மின்னஞ்சல் மூலம் தேர்வர்களுக்கு அனுப்பப்படும் என்றும் தெரிவித்துள்ளது. இந்நிலையில், விதிகளை மீறி தேர்வு மையங்களுக்குள் தேர்வர்கள் செல்போன் எடுத்து சென்றதாக வெளியான தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், பல்வேறு தேர்வு மையங்களில் ஆன்லைன் எழுத்துத் தேர்வில் குளறுபடிகள் நடந்துள்ளதால், தேர்வு நேரத்தில் என்ன செய்ய வேண்டும் என்பதை ஆசிரியர் தேர்வு வாரியம் விளக்க வேண்டும் என தேர்வு எழுதியவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.