சென்னை: பட்டரைவாக்கம் பகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் கொடி ஏற்றுவதற்காக அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வருகையையொட்டி அப்பகுதியில் கட்சியினர், இளைஞர்கள், பொதுமக்கள் காத்திருந்தனர்.
வெகுநேரமான காரணத்தினால் பசியில் இருந்த அப்பகுதி இளைஞர்கள் அவ்வழியே சென்ற பானிபூரி விற்பனையாளரிடம் பானிபூரி வாங்கி உண்டனர்.
காலாவதியான உருளைக்கிழங்கு
அப்போது பசியாக இருந்த இளைஞர்கள், பானிபூரியை வட மாநிலத்தவர் தயார்செய்து தருவதற்கு முன்பு அப்பகுதி இளைஞர்கள் தாங்களே உருளைக்கிழங்கை எடுத்து பானிபூரியில் வைத்து உண்ண ஆரம்பித்தனர்.
அப்போது, ஒரு இளைஞர் பானிபூரியை உண்ண சென்றபோது, அதிலிருந்த உருளைக்கிழங்கு மசாலா துர்நாற்றம் வீசியது. இதனால் சந்தேகம் அடைந்த அவர் அதனை சோதனை செய்தபோது அதில் புழு இருந்தது தெரியவந்தது.
இச்சம்பவத்தை அடுத்து பானிபூரி விற்ற இளைஞரிடம் அவர்கள் விசாரணை செய்ததில், அந்த உருளைக்கிழங்கு வேகவைத்து பல நாள்கள் ஆனதும், கெட்டுப்போகாமல் இருப்பதற்காக உருளைக்கிழங்கை சூடுசெய்து விற்பனை செய்துவந்ததும் தெரியவந்தது.