அழகு... மூன்றெழுத்தில் பிரபஞ்ச உயிர்களின் ஈர்ப்பை உணர்த்தும் சொல். பார்க்கும் விதத்தைப் பொறுத்து, யாவும் அழகே. இயற்கையின் அருட்கொடைகளுக்கு நிறம், சூழல், சாதி எனக் கடிவாளம் போட்டு அழகை ரசிக்கிறது ஓர் கூட்டம். ஓர் பார்வையற்றவன் சக மனிதனுள் அழகு எனக் காண்பது மனிதத்தையே.
மனிதம், கனிவு ஆகிய உயர்ந்த அழகிய பண்புகளே ஒருவரை உயர்த்தும் என்பதற்குச் சான்றே அன்னை தெரசா. பிறர் பசியாறுவதைக் கண்டு இன்பம் கண்ட அவரின் புகழ் மனிதன் வாழும் மட்டும் மறையாது.
'வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்' எனத் தாவரங்களின் உணர்வுகளைப் புரிந்துகொள்ளும் வள்ளலாரின் பார்வையும், மனப்பான்மையும் அழகே!