தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

உலக இளைஞர்கள் தினம் - லட்சம் இளைஞர்கள் இங்கே ஒரு விவேகானந்தர் எங்கே? - இளைஞர்கள் தினம்

பல இளைஞர்களுக்கு தற்போது சமூகம் குறித்த பார்வையில் பக்குவம் கூடியிருக்கிறது. அதேசமயம் இந்த சுதந்திரத்தை ஆரோக்கியமான முறையில் பயன்படுத்தி மனித சமூகத்தை நாகரீகமான அடுத்தக்கட்டத்துக்கு அவசியம்.

விவேகானந்தர்
விவேகானந்தர்

By

Published : Aug 12, 2021, 7:03 AM IST

ஐக்கிய நாடுகள் சபை 1999ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 12ஆம் தேதியை உலக இளைஞர்கள் தினமாக கொண்டாட முடிவெடுத்தது.

ஐநாவின் அறிக்கைப்படி உலக மக்கள் தொகையில் 6ல் ஒரு பங்கு இளைஞர்கள் இருக்கின்றனர். குறிப்பாக இந்தியா போன்ற வளரும் நாடுகளில் இளைஞர்களின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது.

எனவே அவர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு என அனைத்திலும் சரியான அங்கீகாரம் அளித்தல் அவசியமாகிறது. தற்போதைய ஸ்மார்ட் ஃபோன் காலத்து இளைஞர்கள் தங்களது அறிவுத்திறனை வளமாக முன்னேற்றியிருக்கின்றனர்.

சமூக வலைதளங்களின் எழுச்சி காரணமாக யாருக்கும் எதற்கும் அஞ்சாமல் தங்களது கருத்துக்களை வைக்கும் சுதந்திரம் தற்கால இளைஞர்களுக்கு கிடைத்துள்ளது.

அப்படித்தான் பெரும்பாலும் தற்போதைய இளைஞர்களும் இருக்கின்றனர். பல இளைஞர்களுக்கு தற்போது சமூகம் குறித்த பார்வையில் பக்குவம் கூடியிருக்கிறது.

அதேசமயம் இந்த சுதந்திரத்தை ஆரோக்கியமான முறையில் பயன்படுத்தி மனித சமூகத்தை நாகரீகமான அடுத்தக்கட்டத்துக்கு அவசியம். அது இளைஞர்களின் கையில் மட்டுமே இருக்கிறது.

சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால், நூறு இளைஞர்களை கொடுங்கள் நாட்டை மாற்றி காண்பிக்கிறேன் என்றார் விவேகானந்தர். இப்போது நூறு இல்லை லட்சம் இளைஞர்கள் இருக்கிறார்கள் ஆனால் ஒரு விவேகானந்தர் இல்லை என்பதே நிலவரம்.

ABOUT THE AUTHOR

...view details