உலக புள்ளியியல் தின விழா: நூல்களை வெளியிட்ட அமைச்சர் செல்லூர் ராஜூ - உலக புள்ளியியல் தின விழா
சென்னை: நிலையான நீடித்த வளர்ச்சிக்கான இலக்குகள் உள்ளிட்ட நூல்களை அமைச்சர் செல்லூர் ராஜூ வெளியிட்டார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே. ராஜூ, தமிழ்நாடு அரசின் பொருளியல் மற்றும் புள்ளியியல் துறை சார்பாக நடைபெற்ற 3ஆவது உலக புள்ளியியல் தின விழாவின் 2ஆம் நாள் நிகழ்ச்சியினை நேற்று தொடங்கி வைத்தார்.
அதன்பின் அவர் நிலையான நீடித்த வளர்ச்சிக்கான இலக்குகள், தமிழ்நாடு ஒரு பார்வை அக்டோபர் 2020, தமிழ்நாடு உள்நாட்டு உற்பத்தி பற்றிய மதிப்பீடு 2019-20, தமிழ்நாட்டின் முக்கிய வளர்ச்சி குறியீட்டுகள் ஆகிய நூல்களை வெளியிட, தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் சண்முகம் பெற்றுக்கொண்டார்.
இந்நிகழ்வில் திட்டம், வளர்ச்சி மற்றும் சிறப்பு முயற்சிகள் துறையின் அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் ஜெயஸ்ரீ ரகுநந்தன், தகவல் தொழில்நுட்பத் துறையின் அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் ஹன்ஸ் ராஜ் வர்மா, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையின் அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் அதுல்ய மிஸ்ரா, தொழில் துறையின் அரசு முதன்மைச் செயலாளர் என். முருகானந்தம், வேளாண்மை துறையின் அரசு முதன்மைச் செயலாளர் மற்றும் வேளாண்மை உற்பத்தி ஆணையர் ககன் தீப் சிங் பேடி, பொருளியல் மற்றும் புள்ளியியல் துறையின் ஆணையர் முனைவர் அதுல் ஆனந்த் உள்ளிட்ட பல்வேறு துறையின் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.