தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

உலகின் பழமையான நீராவி இயந்திரம்.. பாரம்பரிய ஓட்டத்தை நடத்த திட்டம் - உலகின் பழமையான நீராவி இயந்திரம்

உலகின் பழமையான நீராவி இயந்திரத்தின் பாரம்பரிய ஓட்டத்தை தென்னக ரயில்வே நடத்த உள்ளது.

தென்னக ரயில்வே திட்டம்
தென்னக ரயில்வே திட்டம்

By

Published : Aug 14, 2022, 5:13 PM IST

சென்னை: எழும்பூர் மற்றும் கோடம்பாக்கம் ரயில் நிலையங்களுக்கு இடையே EIR-21 மூலம் இயக்கப்படும் சிறப்பு பாரம்பரிய நீராவி ரயிலை இயக்கும் என தெற்கு ரயில்வே நடத்தும் என தென்னக ரயில்வே ட்விட்டரில் பகிர்ந்த வீடியோவில், 167 ஆண்டுகள் பழமையான இந்த ரயில் இன்ஜின் சுதந்திர தின விழாவிற்கு முன் ஒரு பாதையில் ஓடுவதைக் காணலாம் என சென்னை டிஆர்எம் ட்விட்டரில் தெரிவித்துள்ளது.

75-வது சுதந்திர தின விழாவை நினைவுகூரும் வகையில், இந்திய ரயில்வே திங்கள்கிழமை 167 ஆண்டுகள் பழமையான இன்ஜின், உலகின் பழமையான நீராவி இயந்திரத்தின் பாரம்பரிய ஓட்டத்தை நடத்துகிறது. இந்திய ரயில்வேயின் கூற்றுப்படி, சென்னையில் எழும்பூர் மற்றும் கோடம்பாக்கம் ரயில் நிலையங்களுக்கு இடையே EIR-21 மூலம் இயக்கப்படும் சிறப்பு பாரம்பரியத்தை தெற்கு ரயில்வே நடத்தும் என கூறப்பட்டுள்ளது.

தென்னக ரயில்வே திட்டம்

எக்ஸ்பிரஸ் EIR-21 முதன்முதலில் 1855 இல் இங்கிலாந்தில் இருந்து இந்தியாவிற்கு அனுப்பப்பட்டது. 1901 இல் திரும்பப் பெறப்பட்டதிலிருந்து, 100 ஆண்டுகளுக்கும் மேலாக பீகாரில் உள்ள ஜமால்பூர் பட்டறைகளில் இது ஒரு கண்காட்சியாக வைக்கப்பட்டது. டிஆர்எம் (DRM ) சென்னை ட்விட்டரில் பகிர்ந்த வீடியோவில், 167 ஆண்டுகள் பழமையான இந்த இன்ஜின் சுதந்திர தின விழாவிற்கு முன்பு (trial) ரன் செல்லும் போது விசில் அடிப்பதைக் காணலாம்.

தென்னக ரயில்வே திட்டம்

"விசிலின் அழகான சத்தம் கடந்த நாட்களில் இருந்து நீராவி இன்ஜின் காலத்திற்கு உங்களை திருப்பி அனுப்பும்" என்று டிஆர்எம் பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க:சட்ட உலகில் தனிமுத்திரையைப் பதித்தவர் மூத்த வழக்கறிஞர் நடராஜன்.. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

ABOUT THE AUTHOR

...view details