சென்னை:உடல் ஆரோக்கியத்திற்கு உணவும், உறக்கமும் எந்த அளவுக்கு முக்கியமோ அதே அளவுக்கு உடற்பயிற்சியும் முக்கியமான ஒன்று. இன்றைய ஆரோக்கியமன்ற வாழ்க்கை சூழலில் இருந்து ஓரளவு நம் ஆரோக்கியத்தை தற்காத்துக்கொள்ள வேண்டும் என்றால் உடற்பயிற்சியை தாண்டி வேறு எந்த வழியும் இல்லை என்றே கூறலாம். ஆனால் இந்த உடற்பயிற்சியை மேற்கொள்ளும் சிலர் அதை தவறுதலாக செய்து பல உடல்நல பிரச்சனைகளில் சிக்கிக்கொள்கின்றனர். உடற்பயிற்சி எப்படி செய்ய வேண்டும்? எப்போது செய்ய வேண்டும்? உள்ளிட்ட பயனுள்ள தகவல்களை சுறுக்கமாக பார்க்கலாம்.
- ஆரம்பத்தில் ஆர்வமும் பிறகு சோம்பலும்;நீங்கள் உடற்பயிற்சியை முதன் முதலாக தொடங்கும்போது இருக்கும் ஆர்வமும், உற்சாகமும் நாளடைவில் குறைகிறது என்றால் அதை புதுப்பித்துக்கொள்ள என்ன செய்ய வேண்டும் என யோசியுங்கள். மாறாக இரண்டு நாட்கள் உடற்பயிற்சி செய்துவிட்டு நான்கு நாட்கள் அதை புறக்கணித்தால் உங்கள் உடல் தளர்வடையும்.
- உணவுக்குப் பின் உடற்பயிற்சி;உணவு உட்கொண்டபின் எக்காரணத்தைக் கொண்டும் உடற்பயிற்சி செய்யாதீர்கள். இது உங்கள் உடல் தசைகளுக்கு போதுமான அளவு இரத்த ஓட்டம் கிடைப்பதை தடை செய்யும். இதனால், சில சமையங்களில் தசை விறைப்பு மற்றும் தசை சிதைவுக்கு வழிவகுக்கலாம்.
- ஆரம்பத்திலேயே கடுமையான உடற்பயிற்சி..நல்லதா? கெட்டதா..?உடற்பயிற்சியை தொடங்கும்போது முதலில் மெதுவாக வாம் அப் (warm up) செய்து அதை படிப்படியாக அதிகரிக்கச் செய்து, அதற்கு பிறகுதான் உடற்பயிற்சி மேற்கொள்ள வேண்டும். இப்படி செய்யும்போது உடல் வெப்பநிலை படிப்படியாக அதிகரித்து, இரத்த ஓட்டம் சீராகும். மேலும் தசைகள் இலகுவாக்கப்பட்டு எளிதாக உடற்பயிற்சி மேற்கொள்ள ஒத்துழைக்கும்.
- உடற்பயிற்சியின்போது நிதானம் தேவை;உடற்பயிற்சி மேற்கொள்ளும்போது பொருமையாக உடலை அசைக்க வேண்டும். கய், கால்களை விரித்து சுறுக்கும்போதும், உடலை ஒருபுறம் இருந்து மற்றொருபுறமாக அசைக்கும்போதும் 20 முதல் 30 வினாடிகள் ஏற்கனவே இருந்த நிலையில் இருந்து பொருமையாக திரும்ப வேண்டும். நீங்கள் அவசர அவசரமாக மேற்கொள்ளும் உடற்பயிற்சியால் எவ்வித பயனும் இல்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள். அந்த நேரத்தில் தசை பிடிப்பு, தசை வீக்கம் மற்றும் வலி ஏற்படலாம்.