தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jul 15, 2020, 8:24 PM IST

ETV Bharat / state

சென்னையில் பருவ மழையில் கிடைக்கும் நீரை சேமிக்க நடவடிக்கைகள் தொடக்கம்!

சென்னை: வடகிழக்குப் பருவ மழையால் கிடைக்கவுள்ள 70 விழுக்காடு மழை நீரை சேமிக்கும் பணிகள் இப்போது இருந்தே தொடங்கப்பட்டுள்ளன என மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்
மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்

சென்னை ரிப்பன் மாளிகையில் தென்மேற்குப் பருவமழை குறித்து மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தலைமையில் இன்று (ஜூலை 15) ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த ஆணையர் பிரகாஷ், "ஆறு ஆண்டுகளாக அதிக பொருள்செலவில் மழைநீர் வடிகால் மையம், நுண்ணிய வடிகால் அமைப்பு போன்ற பல்வேறு நடவடிக்கைகள் எடுத்ததால், ஆயிரக்கணக்கில் இருந்த தண்ணீர் தேங்கும் இடங்கள் 50ஆக குறைந்துள்ளன.

மேலும் இக்கூட்டத்தில் எந்தெந்தப் பணிகளை யார் யார் செய்ய வேண்டுமெனவும், அதற்கான கால அவகாசமும் ஆலோசிக்கப்பட்டது.

வடகிழக்குப் பருவமழை மூன்று மாதங்களில் தொடங்க உள்ளது. இதில் கிடைக்கவுள்ள 70 விழுக்காடு மழைநீரை சேமிக்கும் பணிகள் தற்போது இருந்தே தொடங்கப்பட்டுள்ளன. வேளச்சேரி, அம்பத்தூர், திருவொற்றியூர் போன்ற இடங்களில் சாலையோரம் அதிக தண்ணீர் தேங்குவதை சரி செய்வதற்கான நடவடிக்கைகளை அந்தந்த அலுவலர்கள் எடுத்து வருகின்றனர்.

அடையாறு, கூவம், கொசஸ்தலை ஆறு, கோவளம் ஆகிய 4 முக்கிய மழைநீர் வடிகால் நிலையம் சென்னையில் உள்ளது. அடையாறு மற்றும் கூவத்தில் ஓரளவு நுண்ணிய(Micro) வடிகால் திட்டம் முடிகின்ற நிலையில் உள்ளது.

கொசஸ்தலை ஆற்றில் வடிகால் நிலையத்தை அமைக்க, ஆசிய வளர்ச்சி வங்கியுடன் ரூ.2,600 கோடி மதிப்புள்ள ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இது முடிவடைய இன்னும் 2-3 ஆண்டுகள் ஆகும். உலக வங்கியில் இருந்து 1,600 கோடிக் கடன் பெற்று, கூவம் மற்றும் அடையார் பகுதிகளில் நுண்ணிய வடிகால் திட்டம், பெரிய பெரிய கால்வாய்கள் அமைப்பது போன்ற பணிகள் 450 கிலோ மீட்டர் வரை செய்யப்பட்டதால், பருவ மழையிலும் கடந்த ஆண்டு சென்னையில் எவ்வித பிரச்னையும் இல்லாமல் இருக்கிறது. தொடர்ந்து இதுபோன்று பல நடவடிக்கைகள் எடுத்து வருவதன் மூலம் மழை நீரை வீணடிக்காமல் சேகரிக்க முடியும். பருவமழையில் எந்த ஒரு சிக்கலும் இல்லாமல் இருக்கும்" என்றார்.

மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் பேசிய காணொலி

தொடர்ந்து பேசிய தென்மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன், "பருவ மழையைப் பொறுத்தவரை தென்மேற்குப் பருவமழையைவிட, வடகிழக்குப் பருவ மழை மிக முக்கியமானது. சென்னையைப் பொறுத்தவரையில் இயல்பை விட 8 விழுக்காடு பருவ மழை அதிகமாக உள்ளது. தமிழ்நாட்டில் 38 விழுக்காடு அதிகம். தென்மேற்குப் பருவமழை கடந்த 5 ஆண்டுகளில், இந்த ஆண்டுதான் அதிகமான அளவில் கிடைத்துள்ளது"என்றார்.

இதையும் படிங்க: குடிநீர் தேவைக்காக கண்டலேறு அணையிலிருந்து தண்ணீர் பெற உத்தரவு

ABOUT THE AUTHOR

...view details