சென்னை: தமிழ்நாடு ஒருங்கிணைந்த மகளிர் அமைப்பு, சமூக ஆர்வலர்கள் ஆகியோர் இணைந்து இணையத்தை தவறாகப் பயன்படுத்தி ஆபாச காணொலிகளை பதிவேற்றும் ரவுடி பேபி சூர்யா, ஜி.பி. முத்து, திருச்சி சாதனா உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, காவல் துறை தலைமை இயக்குநர் அலுவலகத்தில் இன்று (ஜுலை 4) புகாரளிக்க வந்திருந்தனர்.
ஆனால், இணையதளம் வாயிலாகப் புகார் அளிக்கும்படி அறிவுறுத்திய காவல் துறையினர், அவர்களை அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.
அப்போது செய்தியாளர்களை சந்தித்த மகளிர் அமைப்பினர் பேசுகையில், 'இணையதளம் மூலமாக வணிகம், கல்வி, விளையாட்டு எனத் திறமைகளை வெளிக்காட்டி, அதன்மூலம் நல்ல வாய்ப்புகளை உருவாக்கிட அனைவரும் இணையதளத்தைப் பயன்படுத்தி வருகின்றனர்.
ஆபாச பேச்சு, உடை
இதற்கு மாறாக யூ-ட்யூபர் ரவுடி பேபி சூர்யா, திருச்சி சாதனா, சந்தான லட்சுமி, ஜி.பி. முத்து உள்ளிட்டோர் இணையதளத்தை மிகவும் தவறாகப் பயன்படுத்தி வருகின்றனர். மேலும் இவர்கள் பதிவிடும் காணொலிகளில் அநாகரிகமான ஆபாச பேச்சுகள், பாலுணர்வைத் தூண்டும் வகையிலான உடையணிந்த நடன காணொலிகளே இடம் பெறுள்ளன.
மாணவர் மனநிலை பாதிப்பு