தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சீட்டு பணத்தை கொடுக்காத மகளிர் காவலர்.. 12 வயது சிறுவனிடம் அத்துமீறிய காவலரின் கணவர்! - chennai saidapet

ஆலந்தூரில் 12 வயது சிறுவனிடம் தவறாக நடந்த மகளிர் காவலரின் கணவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். ஏற்கெனவே மகளிர் காவலர் மீது சீட்டு பண முறைகேடு தொடர்பான புகாரும் உள்ளது.

சீட்டு பணத்தை கொடுக்காத மகளிர் காவலர்.. 12 வயது சிறுவனிடம் அத்துமீறிய காவலரின் கணவர்!
சீட்டு பணத்தை கொடுக்காத மகளிர் காவலர்.. 12 வயது சிறுவனிடம் அத்துமீறிய காவலரின் கணவர்!

By

Published : Jun 3, 2022, 10:44 PM IST

சென்னைஆலந்தூர் எம்.கே.என் சாலையில் உள்ள காவலர் குடியிருப்பில் வசித்து வருபவர் கார்த்திக் (45). இவர் மதபோதகராக இருக்கிறார். இவருடைய மனைவி அனந்தநாயகி. இவர் சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் ஏட்டாக பணிபுரிந்து வருகிறார். அனந்தநாயகி, காவலர் குடியிருப்பில் இருக்கும் ஒரு சிலரிடம் சீட்டு பிடித்துள்ளார்.

அதில் பல பேருக்கு அனந்தநாயகி சீட்டு பணத்தை திருப்பிக்கொடுக்கவில்லை. இதனால் அவருடைய வீட்டிற்கு பணம் கேட்டு, அதிகமானோர் வருவது வழக்கமாக இருந்து வந்துள்ளது. இவ்வாறு அதே தெருவில் குடியிருக்கும் சுலோச்சனா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவருக்கு பணம் தர வேண்டியிருந்ததுள்ளது.

இதுதொடர்பாக அந்த பெண், அனந்தநாயகியின் வீட்டிற்குச் செல்லும்போது அவருடன் 12 வயது மகனும் சென்றுள்ளார். அப்போது மகளிர் காவலரின் கணவர் கார்த்திக், சிறுவனிடம் விளையாடுவது போல் பேசிக் கொண்டு, சிறுவனை தனியாக அழைத்துச் சென்று நிர்வாணப்படுத்தி தகாத விதமாக நடந்துள்ளார்.

இதுகுறித்து அறிந்த சிறுவனின் தாய், பரங்கிமலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அப்போது கார்த்திக், சிறுவனிடம் தகாத முறையில் நடந்து கொண்டது தெரிய வந்துள்ளது.

இதனையடுத்து காவல்துறையினர் கார்த்திக் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து, கைது செய்து சிறையில் அடைத்தனர். அதேபோல் அனந்தநாயகியிடம் சீட்டு போட்டு ஏமாந்தவர்கள் 10க்கும் மேற்பட்டோர் சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர்.

ஆனால், அதற்கு காவல்துறையினர் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் சிறுவனின் தாய் புகாரில் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:போலீஸ் வீட்டின் பூட்டை உடைத்து கைவரிசை காட்டிய பலே கொள்ளையர்கள்!

ABOUT THE AUTHOR

...view details