தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

விமானத்தில் நடுவானில் ஏற்பட்ட மாரடைப்பு - பெண் பரிதாப உயிரிழப்பு! - women heart attack in flying flight

சென்னை: கொல்கத்தாவிலிருந்து கிளம்பிய இண்டிகோ விமானத்தில் நடுவானில் பெண்ணுக்கு மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.

chennai

By

Published : Nov 1, 2019, 1:22 PM IST

நிஷா ஹர்ஷல் (43) என்பவருக்கு இதய நோய் பாதிப்பு இருந்ததால் அவர் வேலூர் சி.எம்.சி. மருத்துவமனையில் இதய நோய் சிகிச்சை மேற்கொள்வதற்காக கொல்கத்தாவிலிருந்து சென்னைக்கு இண்டிகோ (indigo) விமானத்தில் புறப்பட்டார். விமானம் நடுவானில் பறந்துகொண்டிருந்தபோது நிஷா ஹர்ஷலுக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டது.

இதனையடுத்து நிஷாவிற்கு விமானத்தில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. சென்னையில் விமானம் தரை இறங்கியதும் விமான நிலையத்தில் உள்ள மருத்துவர்கள் நிஷா ஹர்டிலை பரிசோதனை செய்தபோது அவர் உயிரிழந்திருந்தது தெரியவந்தது.

மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த நிஷா ஹர்ஷல்

நிஷாவின் இறப்பு குறித்து விமான நிலைய காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் அவரது உடலை குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு விமான நிலைய காவலர்கள் அனுப்பிவைத்தனர்.

இதையும் படிங்க: தூத்துக்குடி விமான நிலையம் 2020க்குள் சர்வதேச விமான நிலையமாக மேம்படுத்தப்படும்!

ABOUT THE AUTHOR

...view details