தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சாலையில் வேரோடு சாய்ந்த மரம் - பெண் ஒருவர் படுகாயம்

கிண்டியில் வேரோடு மரம் சாய்ந்து சாலையில் சென்ற பெண் மீது விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சாலையில் வேரோடு சாய்ந்த மரம்
சாலையில் வேரோடு சாய்ந்த மரம்

By

Published : Nov 11, 2021, 6:26 PM IST

சென்னை: தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை தொடங்கியுள்ளதால், சென்னை உள்ளிட்டப் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.

இதனால் சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் ஆங்காங்கே மரங்கள் முறிந்து சாய்ந்து விடுகின்றன.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகப் பொதுமக்கள் யாரும் மரத்தடியில் இருக்கவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் கிண்டி ஆளுநர் மாளிகை வளாகத்தில் பெரிய மரம் ஒன்று வேரோடு சாய்ந்து சாலையில் விழுந்தது.

பெண் படுகாயம்

சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த பெண்ணின் மீது மரக்கிளை விழுந்ததில் அவர் படுகாயமடைந்தார். இதையடுத்து அருகிலிருந்தவர்கள் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸில் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் கனமழையால் சென்னையின் பல்வேறு பகுதிகளில் சாலை நடுவே மரம் சாய்ந்து விழுந்ததால், போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:சென்னையில் மாலை 6 மணிவரை விமான சேவைகள் நிறுத்தம்

ABOUT THE AUTHOR

...view details