சென்னை:ஆவடியில் உள்ள அம்பத்தூர் காவல் துணை ஆணையர் அலுவலகத்தில், பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட கணவரோடு ஆம்புலன்ஸில் வந்த பெண் ஒருவர் புகார் அளித்தார்.
புகாரளிக்க வந்த தம்பதியினர் திருத்தணியைச் சேர்ந்தவர்கள். பெண்ணின் கணவர் பொன்னுவேலின் தந்தை வழி சொத்து திருநின்றவூரில் உள்ளது. சுமார் 9 ஏக்கர் 39 சென்ட் நிலத்தை, முறைகேடாக அங்குள்ள சிலர் அபகரித்து உள்ளதாக புகாரில் கூறப்பட்டுள்ளது.
அனைத்து ஆவணங்களும் தற்போது வரை தங்கள் பெயரில் உள்ள நிலையிலும், சொத்தை ஆக்கிரமிப்பு செய்துள்ளதாகவும், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.