சென்னை:ஆவடி ரயில் நிலையத்தில் பெண் ஒருவரது உடல் கிடப்பதாகஆவடி ரயில்வே காவல் நிலையத்திற்கு நேற்று (ஜனவரி 26) தகவல் கிடைத்தது. அந்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த ரயில்வே காவல்துறையினர், உடலை கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக விசாரணையை தொடங்கினர்.
முதல்கட்ட விசாரணையில் அந்தப் பெண், திருமுல்லைவாயில், வெங்கடேஸ்வரா நகர் பகுதியை சேர்ந்த ஸ்ரீபிரியா (42) என்பதும், இவர் ஆலந்தூரில் உள்ள லஞ்ச ஒழிப்புத் துறையில் தலைமை காவலராக பணியாற்றி வந்ததும் தெரிய வந்தது. இவர் திருமணம் ஆகாத நிலையில் தாய் தந்தையுடன் வசித்து வந்ததாகவும், அண்மையில் அவர்கள் காலமானதை அடுத்து தனியாக வசித்து வருவதும் விசாரணையில் தெரியவந்தது.