சென்னையை அடுத்த பூவிருந்தவல்லி அடுத்த காட்டுப்பாக்கம், இந்திரா நகரைச் சேர்ந்தவர் மூர்த்தி(65). இவரது மனைவி தனலட்சுமி. நேற்றிரவு கடைக்கு சென்ற தனலட்சுமி வீடு திரும்பிகொண்டிருந்தபோது பின்னால் வந்த அடையாளம் தெரியாத கத்தியைக் காட்டி கழுத்தில் இருந்த ஐந்து சவரன் தங்க நகையை பறித்து தப்பி ஓட முயன்றார்.
கொள்ளை முயற்சி - வெட்டு வாங்கிய பெண் - woman stabbed
சென்னை: பூவிருந்தவல்லியில் பெண்ணை தாக்கி வழிப்பறி செய்ததாக நிருபர் அடையாள அட்டை வைத்திருந்த நபர் பொதுமக்களால் தாக்கப்பட்டு காவல் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
வெட்டு வாங்கிய பெண்
அவரிடமிருந்து தப்பிக்க தனலட்சுமி போராடியபோது, அப்போது கொள்ளையன் கையில் வைத்திருந்த கத்தியால் அவரை வெட்டினார். இதனைக் கண்ட அப்பகுதி இளைஞர்கள் கொள்ளையனை மடக்கி பிடித்து பூவிருந்தவல்லி காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர்.
பிடிப்பட்ட நபரிடம் இருந்து பத்திரிகையாளர் அடையாள அட்டை,கத்தி, மிளகாய் பொடி மற்றும் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர். விசாரணையில் பிடிப்பட்ட நபர் ஐயப்பந்தாங்கல் பகுதியைச் சேர்ந்த சிவக்குமார் என்பது தெரியவந்தது.