தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ரயிலில் பெண் தற்கொலை - பயணிகள் அதிர்ச்சி! - ஹவுரா விரைவு ரயில்

சென்னை: ஹவுரா விரைவு ரயிலின் கழிவறையில் பெண் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் பயணிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

woman-commits-suicide-in-howrah-express
woman-commits-suicide-in-howrah-express

By

Published : Mar 17, 2020, 11:47 AM IST

மேற்கு வங்கம் மாநிலம் ஹவுரா நகரிலிருந்து சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு ஹவுரா விரைவு ரயில் இயக்கப்பட்டு வருகிறது. வழக்கம் போல் இந்த ரயில் ஹவுராவிலிருந்து புறப்பட்டு இன்று காலை 3.30 மணியாளவில் சென்னை வந்தடைந்துள்ளது. ரயிலிலிருந்து பயணிகள் அனைவரும் வெளியேறிய நிலையில், ரயில்வே ஊழியர்கள் பெண்களுக்கான தனிப்பெட்டியிலுள்ள கழிவறைகளை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது பெண்கள் பெட்டியிலிருந்த ஒரு கழிவறையின் கதவு உள் தாழிட்டிருந்ததினால், ஊழியர்கள் கதவை வெகு நேரமாக தட்டியுள்ளனர். இருப்பினும் கதவு திறக்கப்படாததால், ஊழியர்கள் இணைந்து கதவை உடைத்துள்ளனர். அப்போது சுமார் 30 வயது மதிக்கதக்க பெண் ஒருவர் தனது துப்பட்டாவால் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது தெரியவந்துள்ளது.

இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த ஊழியர்கள் உடனடியாக ரயில்வே காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல் துறையினர் உடலை மீட்டு, உடற்கூறாய்விற்காக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

மேலும் இறந்தவர் வடமாநில பெண் என்றும், தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்தும் ரயில்வே காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பயணி ஒருவர் ரயிலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பயணிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:மதுபோதையில் மகள் மீது பாலியல் வன்முறை: தந்தை கைது

ABOUT THE AUTHOR

...view details