தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பாலியல் தொழிலில் ஈடுபட்ட பெண் கைது - prostitution case

பல்லாவரம் அருகே பாலியல் தொழிலில் ஈடுபட்ட பெண்ணை காவல் துறையினர் கைதுசெய்து சிறையில் அடைத்தனர்.

பாலியல் தொழிலில் ஈடுபட்ட பெண் கைது
பாலியல் தொழிலில் ஈடுபட்ட பெண் கைது

By

Published : Sep 6, 2021, 7:20 PM IST

சென்னை: பல்லாவரம் அடுத்து அனகாபுத்தூர் பகுதியில் பாலியல் தொழிலில் சிலர் ஈடுபட்டுவருவதாக பல்லாவரம் உதவி ஆணையருக்குத் தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின்பேரில் சங்கர் நகர் காவல் துறையினர் அனகாபுத்தூர் பகுதியை மூன்று நாள்களாகத் தீவிரமாகக் கண்காணித்துவந்தனர்.

அதில் சாமுண்டீஸ்வரி நகர், ஐயப்பன் தெருவைச் சேர்ந்த லட்சுமி (54) என்பவர் பெண்களை வைத்து பாலியல் தொழிலில் ஈடுபட்டுவந்தது தெரியவந்தது. இதையடுத்து நான்கு பெண்கள் உள்பட ஐந்து பேரை கைதுசெய்து காவல் நிலையம் அழைத்துவந்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் லட்சுமியிடம் குடும்ப வறுமையால் வேலை கேட்டுவரும் பெண்களைக் கட்டாயப்படுத்தி பாலியல் தொழிலில் ஈடுபட வைத்தது தெரியவந்தது. லட்சுமி மீது சங்கர் நகர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் முன்னிறுத்தி இன்று (செப். 6) சிறையில் அடைத்தனர்.

மற்ற நான்கு பெண்களையும் காவல் துறையினர் எச்சரித்து அனுப்பினர். மேலும் லட்சுமிக்கு உடந்தையாக யாராவது இருக்கிறார்களா எனவும் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

இதையும் படிங்க: தனுஷ்கோடியில் இருந்து இலங்கைக்கு தப்ப முயன்ற பெண் - போலீசார் பிடித்து விசாரணை

ABOUT THE AUTHOR

...view details