சென்னை : தாம்பரம் கடப்பேரி பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெற்று வருவதாக அடையார் மதுவிலக்கு காவலர்களுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இத்தகவலின் அடிப்படையில் காவல் துறையினர் அந்தப் பகுதியை ரகசியமாக கண்காணித்து வந்தனர்.
அப்போது தாம்பரம் கடப்பேரி தெற்கு குளக்கரை தெருவைச் சேர்ந்த சக்திபிரியா (30) என்பவர் வீட்டிலேயே கஞ்சா விற்பனை செய்து வருவது தெரியவந்தது. இதையடுத்து சக்திபிரியாவின் வீட்டில் அதிரடியாக சோதனை நடத்திய காவல் துறையினர், அவர் வீட்டின் உள்ளே குழி தோண்டி புதைத்து வைத்திருந்த மூன்று கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.