தமிழ்நாடு

tamil nadu

2 மாதங்களில் கிரானைட் குவாரிகள் ஏலம் : சிவி சண்முகம்!

By

Published : Jul 11, 2019, 7:28 PM IST

சென்னை: அரசு புறம்போக்கு நிலத்தில் உள்ள கிரானைட் குவாரிகள் இரண்டு மாதங்களில் ஏலம் விடப்படும் என அமைச்சர் சி.வி. சண்முகம் தெரிவித்துள்ளார்.

auction

திமுக சட்டப்பேரவை உறுப்பினர் இன்பசேகரன் மானியக் கோரிக்கை விவாதத்தின்போது, கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டங்களில் உள்ள கிரானைட் குவாரிகள் மூடப்பட்டிருப்பதாக தெரிவித்தார். இதற்கு பதிலளித்த அமைச்சர் சிவி சண்முகம், மத்திய சுற்றுச்சூழல் துறை அளித்த உத்தரவின் பேரில்தான் தமிழ்நாட்டில் 1,099 குவாரிகள் மூடப்பட்டுள்ளன. இந்தியா முழுவதும் இந்த நிலைதான்.

அவற்றை திறக்க தமிழ்நாடு அரசு மேற்கொண்ட முயற்சியின் காரணமாக, மாநில சுற்றுச்சூழல் மதிப்பீட்டு குழு மூலம் உரிமையை பெற்றுக்கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது. விரைவில் மூடப்பட்டுள்ள கிரானைட் குவாரிகள் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

அரசு புறம்போக்கு நிலத்தில் உள்ள கிரானைட் குவாரிகளை ஏலம் விடுவதற்கான நடவடிக்கைகளில் அரசு ஈடுபட்டு வருகிறது. இன்னும் இரண்டு மாதங்களில் ஏலம் விடப்படும். சுரங்கத்திற்கு அனுமதி கொடுக்கும் விவகாரத்தில் மத்திய அரசிடம் விளக்கம் கேட்கப்பட்டிருக்கிறது. விரைவில் தீர்வு காணப்படும் என்றார்.

ABOUT THE AUTHOR

...view details