தொழில்-கல்வி ஒத்துழைப்பை மேம்படுத்த விப்ரோ ஜி இ ஹெல்த்கேருடன் இணைந்து செயல்பட ஐஐடி சென்னை முடிவு செய்துள்ளது. இந்த ஒத்துழைப்பு மூலம் எம்எஸ் (MS) ஆராய்ச்சி மாணவர்களுக்கான தொழில்துறை வாய்ப்புகள் அதிகரிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சுகாதாரம் சார்ந்த சவால்களை எதிர்கொள்ளும் வகையில், ஆராய்ச்சி மாணவர்கள் விப்ரோ ஹெல்த்கேர் நிபுணர்களுடன் இணைந்து பணியாற்றும் வகையில், இத்திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.
இதன் கீழ் மருத்துவ ஆராய்ச்சி மாணவர்களுக்கு விப்ரோ ஜி இ ஹெல்த்கேர் சார்பாக நிதியுதவி வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக விப்ரோ ஜி இ ஹெல்த்கேர் தலைவர் அசிம் பிரேம்ஜி கூறுகையில், " டிஜிட்டல் தொழில்நுட்பங்கள் மூலம் உலக சுகாதரத்தின் நிலை மாறிவருகிறது. மேலும் மாணவர்களுக்கு தேவையான வழிகாட்டுகள், ஆலோசனைகளை வழங்க நாங்கள் தயாராக உள்ளோம். அதேபோல், அனைத்து மக்களுக்கும் மருத்துவம் கிடைக்கும் வகையில், சுகாதாரத்துறையில் உள்ள சவால்களுக்கான தீர்வுகளை எட்டுவதற்கு மாணவர்களை ஊக்குவிப்போம்" என்றார்.
இதனையடுத்து பேசிய சென்னை ஐஐடி இயக்குனர் பாஸ்கர் ராமமூர்த்தி கூறுகையில், " சமூகத்தில் நேர்மைறையான மாற்றத்தைக் கொண்டுவரும் முயற்சியில், விப்ரோவுடன் இணைந்து செயல்படுவது மகிழ்ச்சியளிக்கிறது. இதன் மூலம் மாணவர்களுக்கு சுகாதாரம் சார்ந்த பல்வேறு திட்டங்களில் பணியாற்றுவதற்கான வாய்ப்பு கிடைக்கும். அதேபோல் அத்துறை வல்லுநர்களின் வழிகாட்டுதலின் கீழ் செயல்படும் வகையில் புதிய வாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது. ." என்றார்.
இதையும் படிங்க:சென்னை ஐஐடியில் ஆன்லைன் பிஎஸ்சி டிகிரி