இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், வளிமண்டலத்தில் நிலவும் காற்றின் வேக மாறுபாடு காரணத்தால், தமிழ்நாடு, புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்திற்கு ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னையை பொறுத்தவரை வெப்பம் 23 டிகிரி செல்சியஸ் முதல் 31 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும். சென்னை மற்றும் சென்னையை ஒட்டிய சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. பொதுவாக வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.