தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நீட் தேர்வு ரத்து குறித்து INDIA கூட்டணியிடம் கையெழுத்து வாங்குமா திமுக? - முன்னாள் அமைச்சர் கேள்வி! - மாவட்டச் செய்திகள்

DMK signature movement to cancel NEET exam: திமுக ஆட்சிக்கு வந்து இரண்டரை ஆண்டுகளுக்கு பிறகு நீட் தேர்வை ரத்து செய்ய தற்போது ஊரெல்லாம் கையெழுத்து வாங்குவது நாடாளுமன்ற தேர்தல் நாடகம் என அதிமுக முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஐயபாஸ்கர் குற்றம்சாட்டியுள்ளனர்.

நீட் தேர்வை ரத்து செய்ய இந்தியா கூட்டனியில் இருக்கும் கட்சிகளிடம் கையெழுத்து வாங்குமா தி.மு.க?
நீட் தேர்வை ரத்து செய்ய இந்தியா கூட்டனியில் இருக்கும் கட்சிகளிடம் கையெழுத்து வாங்குமா தி.மு.க?

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 22, 2023, 5:10 PM IST

சென்னை:நீட் விலக்கு தொடர்பாகக் கையெழுத்து இயக்கம் தொடங்கியுள்ள திமுக அரசின் நிலைப்பாடு குறித்து முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், 2004ஆம் ஆண்டில் திமுக-காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணியிலிருந்த போது நீட் தேர்வை அமல்படுத்திய காங்கிரஸ் அரசை எதிர்த்து கையெழுத்து இயக்கம் நடத்தாது ஏன் என்று கேள்வி எழுப்பினார். நீட் தேர்வு என்ற விஷத்தைத் தமிழகத்தில் விதைத்தது திமுகவும், காங்கிரஸ் கட்சியும் தான் எனவும் விஜயபாஸ்கர் குற்றச்சாட்டினார்.

ஜல்லிக்கட்டு விவகாரத்தில், தமிழகத்திற்குத் துரோகம் செய்ததும் காங்கிரஸ் தான் என்றும், நீட் தேர்வால் தமிழகத்துக்குத் துரோகம் இழைத்ததும் காங்கிரஸ் தான் என்று குற்றம் சாட்டிய அவர், தமிழக மக்களுக்குத் துரோகம் இழைத்த காங்கிரஸ் கட்சியுடன் கைகோர்த்துச் செயல்படுவது ஏன் என்றும் கேள்வி எழுப்பினார்.

திமுக ஆட்சிக்கு வந்தால் ஒரே கையெழுத்தில் நீட் தேர்வு ரத்து செய்வோம் என்று சொல்லி ஆட்சிக்கு வந்து விட்டு, 29 மாதங்களுக்குப் பிறகு, தற்போது, ஊரெல்லாம் கையெழுத்து வாங்குவது ஏன்? என அமைச்சர் உதயநிதியும், தமிழக முதலமைச்சர் ஸ்டாலினும் விளக்கம் அளிக்க வேண்டும் என்றார்.

நீட் தேர்வு ரத்து செய்வது குறித்து கையெழுத்து இயக்கம் நடத்துவது ஒரு ஆக்கப்பூர்வமான நடவடிக்கையா என்பதை திமுக அரசு விளக்கம் அளிக்க வேண்டும். திமுக அரசு ஆதாயத்திற்காக நடத்தும் கையெழுத்து இயக்க நாடகத்தில் அதிமுக எப்படிப் பங்கேற்கும் எனக் கேள்வி எழுப்பினார்.

இதையும் படிங்க:பிரதமர் மோடிக்கு கருத்து சொன்ன ஆசிரியர்; தமிழில் வாழ்த்துக் கடிதம் அனுப்பிய மோடி!

மத்திய அரசுக்கு எதிராக அழுத்தம் கொடுத்து, நாடாளுமன்றத்தை முடக்கி, சட்டப் போராட்டம் நடத்துவதுதான் ஆக்கப்பூர்வமான நடவடிக்கையாக இருக்குமே தவிர, கையெழுத்து இயக்கம் நடத்துவது ஒரு அரசியல் நாடகம். மேலும், நீட் தேர்வுக்கு எதிராக மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா நீதிமன்றத்திற்குச் சென்று ஓராண்டு விளக்கு பெற்றார்.

அப்போது, மத்தியிலிருந்த காங்கிரஸ் கட்சியும் கூட்டணியிலிருந்த திமுகவும் மறுசீராய்வு மனு அளித்து இடையூறு செய்தது யாராலும் மறக்க முடியாது என்று கூறினார். திமுக அரசு நடத்தும் இந்த கையெழுத்து இயக்கம் முழு பூசனிக்காயைச் சோற்றில் மறைக்கும் நடவடிக்கை என்றார்.

அரசுப் பள்ளி மாணவர்கள் மருத்துவ படிப்பில் 7.5% உள் இட ஒதுக்கீடு கொண்டு வந்தது மிகப்பெரிய சாதனை என்றும் நீட் எதிர்ப்பு கொள்கையில் அதிமுக என்றும் உறுதியாக உள்ளதாகக் கூறினார். நீட் தேர்விலிருந்து விலக்கு அளித்தால் தான் I.N.D.I.A கூட்டணியில் தொடர்வோம் என்றும், நீட் தேர்வுக்கு எதிராக I.N.D.I.A கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சியிடமோ, ஆம் ஆத்மி கட்சியிடமோ கையொப்பம் பெற்று ஆக்கப்பூர்வமான நடவடிக்கை எடுக்க திமுகவால் முடியுமா? என பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார்.

இதையும் படிங்க:“நாடாளுமன்றத் தேர்தலுக்கு 5 மாநில தேர்தல் வெற்றி முன்னோட்டமாக இருக்கும்” - ஜோதிமணி எம்பி

ABOUT THE AUTHOR

...view details