தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'தொற்று குறைந்ததால் தான் அரசியல் பரப்புரைக்கு அனுமதி' - அமைச்சர் விஜயபாஸ்கர் - Rajiv Gandhi Hospital, Chennai

சென்னை: கரோனா தொற்று குறைந்து வருவதால்தான் அரசியல் கட்சிகளின் கூட்டங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

minister vijayabaskar
minister vijayabaskar

By

Published : Dec 19, 2020, 5:50 PM IST

சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் முதியோர் நலன் குறித்த புத்தகம் மற்றும் முதியோர் பராமரிப்பு குறித்த கையேடு ஆகியவற்றை வெளியிட்டார். முன்னதாக, புற்று நோய் பாதிக்கப்பட்டவர்களுக்கு செடிகள் மூலமாக குணமடைய வைக்கும் 15 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள தோட்டம் (healing garden) மற்றும் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை வளாகத்தில் ஆதரவற்றோருக்கான மறுவாழ்வு மையம் ஆகிவற்றை திறந்து வைத்தார்.

மேலும், சர்வதேச முதியோர் தினத்தை முன்னிட்டு, ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் உள்ள செவிலியர்கள், முதியோரை பாதுகாக்கும் உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர்.

40 படுக்கை வசதி கொண்ட மறுவாழ்வு மற்றும் சிகிச்சை மையம்

பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியதாவது, "அரசு ராஜீவ் காந்தி மருத்துவமனையில் குடும்பத்தால் கைவிடப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க 40 படுக்கை வசதி கொண்ட மறுவாழ்வு மற்றும் சிகிச்சை மையம் திறக்கப்பட்டுள்ளது. புற்று நோயாளிகளின் மன அழுத்தத்தை போக்கும் வகையில் பிரத்யேக வார்டு ஒன்று திறக்கப்பட்டுள்ளது.

210 நபர்களுக்கு கரோனா

சென்னை ராஜிவ்காந்தி மருத்துவமனை

கரோனா தொற்று பரவல் தொடர்பாக சென்னையில், 97 கல்லூரிகள், 108 கல்லூரி விடுதிகள் கண்காணிக்கப்பட்டு வருகிறது. கரோனா விதிமுறைகளை மீறும் கல்லூரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். 8 ஆயிரம் பரிசோதனைகளில் வெறும் 210 நபர்களுக்கு மட்டுமே தொற்று ஏற்பட்டுள்ளது. ஊதிய உயர்வு கோரும் மருத்துவர்களின் கோரிக்கை குறித்து அரசு பரிசீலித்து வருகிறது, விரைவில் நல்ல முடிவு எடுக்கப்பட்டுள்ளது. கரோனா தொற்று குறைந்து வருவதால் தான் அரசியல் கட்சிகளின் கூட்டங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது" என்றார்.

தொற்று குறைந்ததால் தான் அரசியல் பரப்புரைக்கு அனுமதி

இதையும் படிங்க:வடமாவட்டத்தில் திடீரென முளைத்த சுவர் விளம்பரம்: அஞ்சா நெஞ்சர் அண்ணன் மு.க.அழகிரி

ABOUT THE AUTHOR

...view details